தமிழகம்

கடலூர் ரசாயன ஆலையில் தீ விபத்து; அதிகரிக்கும் பலி எண்ணிக்கை !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடலூர் சிப்காட் பகுதியில் பூச்சிக்கொல்லி ரசாயன ஆலை இயங்கி வருகிறது. தனியாருக்கு சொந்தமான இந்த தொழிற்சாலையில் இன்று பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. காலை பணியில் 100 கு மேற்பட்டவர்கள் வேலை பார்த்த நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது. 

ALSO READ  நாளைமுதல் பள்ளிகள் திறப்பு; 30 லட்சம் வைட்டமின் மாத்திரைகள் தாயார் !

இதில் 20 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும், 10 க்கு மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. படுகாயமடைந்தவர்களை தொழிற்சாலைக்கு சொந்தமான மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்க சென்றவர்களுக்கு ரசாயன தெளிப்புகள் காரணமாக காயங்கள் ஏற்பட்டுள்ளது. 

ALSO READ  அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்து விலகியது தேமுதிக !

இந்த விபத்துக்கு நிர்வாகத்தின் அலட்சிய போக்கு தான் காரணம் என்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வழக்கறிஞர்கள் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டத் தடை:

naveen santhakumar

ஜெய்பீம் திரைப்பட இயக்குனர் ஞானவேல் வருத்தம் தெரிவித்து அறிக்கை

News Editor

சென்னை திரும்பினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்: தொண்டர்கள் உற்சாகம்!

News Editor