தொழில்நுட்பம்

வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்……மறைந்து போகும் மெசேஜ்கள்…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

Whats app செயலியில் அனுப்பும் செய்திகள் குறிப்பிட்ட காலத்துக்குள் மறைந்து போகும் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Facebook நிறுவனத்துக்குச் சொந்தமான whats app செயலியில், கடந்த சில காலமாகவே இந்த வசதியைக் கொண்டு வர முயற்சிகள் நடந்தன. தற்போது அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ) பக்கத்தில் இந்த வசதி குறித்த அறிமுகத்தை அந்நிறுவனம் கொடுத்துள்ளது.

அனுப்பும் செய்திகளை மறைய வைக்கும் கட்டுப்பாடு பயனர்கள் கையில்தான் இருக்கும். வேண்டுமென்றால் அதைப் பயன்படுத்தலாம். இல்லையென்றால் அணைத்து வைக்கலாம். ஆனால், குழுக்களில் அனுப்பும் செய்திகள் மறைவது அந்தந்தக் குழுக்களின் அட்மின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும்.அனுப்பிய செய்திகள் மறைய 7 நாட்கள் என்கிற கால அளவை whats app நிர்ணயித்துள்ளது. 

ALSO READ  Hyundai நிறுவன்தான் பட்ஜெட் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

ஒரு வாரம் வரை whats app செயலியை இயக்காமல் இருந்தால் அந்தச் செய்தி மறைந்துவிடும். ஆனால்,whats app செயலி பின்னணியில் ஓடிக்கொண்டிருக்கும் போது, செய்திகளின் முன்னோட்டம் நோட்டிஃபிகேஷனில் வரும். அப்படி வரும்போது மறைந்து போன செய்தியின் முதல் சில வார்த்தைகளைப் பார்க்க முடியும்.

ஒரு வேளை மறைய வேண்டிய ஒரு செய்தியை இன்னொருவருக்கு அனுப்பி, அங்கு மறையும் வசதி அணைத்து வைக்கப்பட்டிருந்தால் அந்த உரையாடலில் ஃபார்வர்ட் செய்யப்பட அந்தச் செய்தி மறையாது. இதே வசதி பயனர்கள் அனுப்பும் புகைப்படங்கள், காணொலிகள், ஒலிச் செய்திகள் என அனைத்துக்கும் இருக்கும். ஆனால், தானாகப் பதிவிறக்கம் செய்யும் வசதி தேர்வு செய்யப்பட்டிருந்தால் அது மறைந்தாலும் உங்கள் மொபைலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.

ALSO READ  ‘பீஸ்ட்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் :

கடந்த வருடம் வாட்ஸ் அப்பின் சோதனை வடிவத்தில் இந்த அம்சம் பரிசோதிக்கப்பட்டது. ஆண்ட்ராய்ட் மொபைல்களில் இந்த வசதியை அறிமுகம் செய்யத் திட்டமிருந்தது. தற்போது ஆண்ட்ராய்ட், ஆப்பிள் ios என அனைத்து இயங்கு தளங்களிலும் வாட்ஸ் அப் செயலியில் இந்த வசதி அறிமுகம் செய்யப்படும். ஆனால், அதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு புதிய அம்சங்கள் அறிமுகம்…!!!!

Shobika

இனி பசுக்களுக்கும் வரன் பார்க்கலாம்- மேட்ரிமோனி இணையதளம் தொடக்கம்

Admin

விரைவில் BMW- S1000R மாடல் இந்திய சந்தையில் அறிமுகம்…

Shobika