தொழில்நுட்பம்

இந்தியாவில் யமஹா நிறுவனத்தின் ஹைப்ரிட் ஸ்கூட்டர் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

யமஹா நிறுவனம் 2021 பசினோ 125 ஹைப்ரிட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய யமஹா பசினோ ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்ட இந்தியாவின் முதல் ஸ்கூட்டர் என்ற பெருமையை பெற்று இருக்கிறது. பசினோ மட்டுமின்றி ரே ZR ஹைப்ரிட் ஸ்கூட்டரையும் யமஹா அறிமுகம் செய்துள்ளது.

இருப்பினும் , இரு ஹைப்ரிட் மாடல்களின் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்திய சந்தையில் பசினோ மாடல் 2015 மே மாத வாக்கில் அறிமும் செய்யப்பட்டது. அப்போது இந்த மாடலில் 113 cc என்ஜின் வழங்கப்பட்டு இருந்தது. இந்த என்ஜின் 7 பி.ஹெச்.பி. பவர், 8.1 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்கியது. இதை தொடர்ந்து இதன் பிஎஸ்6 மாடல் 125 cc பிரிவில் அறிமுகமானது.

தற்போது அறிமுகமாகி இருக்கும் பசினோ ஹைப்ரிட் மாடலில் உள்ள மைல்டு-ஹைப்ரிட் தொழில்நுட்பம் ஸ்டார்டர் மோட்டார் ஜெனரேட்டர் (SMG) உள்ளது. இது என்ஜினுக்கு தேவையான சமயத்தில் பவர் அசிஸ்ட் கொடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

ALSO READ  நாடாளுமன்ற புதிய கட்டிடம் திறப்பு எப்போது?

புதிய SMG தவிர இதன் என்ஜின் முந்தைய மாடலில் இருந்ததை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. இது 125cc பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட யூனிட் ஆகும். இந்த என்ஜின் 8.2 பி.ஹெச்.பி பவர், 10.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஜியோவை விட அசத்தலான திட்டத்தை அறிமுகப்படுத்திய பிஎஸ்என்எல்

Admin

சோனி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவியின் தொடக்க விலை ரூ.4.99 லட்சம் மட்டுமே..!!!

Shobika

மார்ச்சில் அறிமுகமாகும் oppoவின் அடுத்த மாடல் என்ன தெரியுமா

Admin