தொழில்நுட்பம் வணிகம்

ஜியோவை விட அசத்தலான திட்டத்தை அறிமுகப்படுத்திய பிஎஸ்என்எல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜியோ வை பின்னுக்கு தள்ள பிஎஸ்என்எல் நிறுவனம் 1500 ஜிபி டேட்டாவுடன் கூடிய புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்திய தொலைதொடர்பு சந்தையில் கடந்தாண்டு அதிரடியாக உயர்த்தப்பட்ட கட்டணங்களால் 2019 இறுதியில் அடுத்தடுத்து புதிய திட்டங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அறிவித்தன. இது 2020ம் ஆண்டு தொடருமா என வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்த நிலையில் கடந்த 10 நாட்களாக பல்வேறு திட்டங்களை ஜியோ,வோடபோன்,ஏர்டெல் நிறுவனங்கள் அறிவித்தன.

இந்த வரிசையில் தற்போது பிஎஸ்என்எல் நிறுவனமும் இணைந்துள்ளது.அந்த நிறுவனம் புதிய பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ரூபாய் 1999க்கு 1500 ஜிபி என்ற இத்திட்டம் ஜியோவின் 2500 ரூபாய்க்கான பிராட்பேண்ட் பைபர் திட்டத்திற்கு எதிராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  வெரிஃபிகேஷனை தொடங்கியது ட்விட்டர் வலைதளம் :

இதில் 200 எம்பிபிஎஸ் வேகத்தில் இணைய சேவையை வழங்க உள்ளது. இதில் அன்லிமிட்டட் கால்களையும் மேற்கொள்ளலாம். தினசரி 1.5 டி.பி அளவு டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல் நிறுவனம், அதனை தாண்டி உபயோகிக்கும்போது 2 எம்பிபிஎஸ் க்கு வேகத்தை குறைத்து விடுகிறது.

ஆனால் இந்தத் திட்டம் சென்னை மற்றும் தெலுங்கானா ஆகிய இரு பகுதிகளில் இருப்பவர்கள் மட்டுமே ரீசார்ஜ் செய்ய முடியும். இதன் வேலிடிட்டி 90 நாட்களாகும்.

ALSO READ  ஐபோன் மற்றும் ஐபேட் பயனாளர்களுக்கு CERT-In எச்சரிக்கை :


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்த போன்களில் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது……உங்கள் மொபைலும் இந்த வரிசையில் உள்ளதா????

naveen santhakumar

வெரிஃபிகேஷனை தொடங்கியது ட்விட்டர் வலைதளம் :

naveen santhakumar

மோட்டோரோலாவின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்

Admin