உலகம்

சிரியாவில் ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சிரியாவில் ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 ராணுவவீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.

சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு உள்நாட்டு போர் வெடித்தது. அப்போது, அரசு படைகளுக்கு எதிராக ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பெரும் பலம் பெற்று, நாட்டின் பல்வேறு பகுதிகளை பிடித்தது. ஐஎஸ் தீவிரவாதிகளை எதிர்த்து அரசுக்கு ஆதரவாக ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளும், குர்திஷ் போராளிகளுக்கு ஆதரவாக அமெரிக்காவும் உள்நாட்டு போரில் களமிறங்கின.

இதனால் சிரியாவே சின்னாபின்னமானது. அங்கிருந்து படிப்படியாக ஐஎஸ் தீவிரவாத அமைப்பு விரட்டி அடிக்கப்பட்டது.

ALSO READ  அமெரிக்கா அதிபர் ஜோ பைடனுக்கு டிரம்ப் வாழ்த்து !

இந்த நிலையில் இத்லீப் மாகாணத்தின் சமாகா மற்றும் ஹவாய்ன் நகரங்களில் உள்ள 2 ராணுவ முகாம்களை குறிவைத்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். 400-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டும், குண்டுகளை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 40 ராணுவவீரர்கள் பலியாகினர். 80 பேர் படுகாயம் அடைந்தனர்.

அதே சமயம் ராணுவ வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 50 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் 90 பயங்கரவாதிகள் பலத்த காயம் அடைந்தனர்.

ALSO READ  கொரோனோ இருந்தாலும் பரவாயில்லை. சீன பெண்ணை மணந்த இந்தியர்.

இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நேபாளத்தில் நிலநடுக்கம்….. ரிக்டர் 6.0 பதிவு:

naveen santhakumar

மனித தொடர்புகளை குறைக்க ட்ரோன்களை பயன்படுத்தும் சிங்கப்பூர் அரசு….

naveen santhakumar

யூரோ கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை வென்றது இத்தாலி

News Editor