உலகம் தொழில்நுட்பம்

இணையத்தையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா இன்று இந்த வார்த்தையை உச்சரிக்காத நபர்களே இல்லை எனும் அளவிற்கு இந்த வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

கொரோனா வைரஸ்.

இந்த வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் உலக நாடுகளின் சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவர்கள் உலக மக்களின் விழிப்புணர்வுக்காகவும் இந்த உயிர்க்கொல்லி வைரஸில் இருந்து எவ்வாறு தங்களை காத்துக் கொள்வது என்பது குறித்தும் இதன் அறிகுறிகள் குறித்தும் பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.

அதேநேரத்தில் கொரோனா வைரஸ் குறித்து பல தவறான அதிகாரபூர்வமற்ற தகவல்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் உலக மக்களின் இந்த கொரோனா ஆர்வத்தை பயன்படுத்தி புகுந்து விளையாடுகிறார்கள் ஹேக்கர்கள்.

ஹேக்கர்கள் எனப்படும் இந்த ஸைபர் கிரிமினல்கள் வைரஸ் பற்றிய வீடியோ பைல்கள், PDF, MP4 மற்றும் DOCX பைல்கள் மூலம் தங்கள் கைவரிசையை காட்டுகிறார்கள்.

ALSO READ  அமேசான் பிரைம் டே சேல் விரைவில் தொடக்கம் :

கொரோனா பற்றிய தகவல்களாக ஏதேனும் ஒரு வடிவத்தில் இந்த மால்வேர்கள் ஹேக்கர்களால் பரப்பப்பட்டு வருகிறது. கொரோனோ பற்றிய தகவல்கள் என்ற எண்ணத்தில் போன்கள் அல்லது கணினிகளில் கொரோனோ தொடர்பான இந்த பைல்களை டவுன்லோட் செய்வதன் மூலம் இந்த ஹேக்கர்களின் வலையில் விழவாய்ப்புள்ளது.

இந்த ஹேக்கர்களால் அனுப்பப்படும் இந்த மால்வேர்கள் நம்முடைய சாதனங்களில் உள்ள டேட்டாக்களை திருடவும், பிரதியெடுக்கவுமா, நம் தகவல்களை மாற்றி அமைக்க அல்லது அழிக்கும் திறன் கொண்டது.

ALSO READ  கொரோனாவால் பாதிக்கப்பட்ட திரிணமூல் எம்.எல்.ஏ. மரணம்...

மேலும் கணினி அல்லது கணினி சார்ந்த செயல்பாடுகளில் போது இவை குறுக்கீடும் என KASPERSKY நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே இது போன்ற ஆபத்துகளில் இருந்து தப்பிக்க பைல்களை டவுன்லோட் செய்யும் முன் அது தொடர்பான Extension களை கவனமாக பார்க்க வேண்டும்.

டாக்குமெண்ட்கள் மற்றும் வீடியோ பைல்களில் .exe அல்லது .ink என்று குறிப்பிடப்பட்டு இருந்தால் அவற்றை டவுன்லோட் செய்ய வேண்டாமென்று Kaspersky நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மின்னல் வேகத்தில் வந்த கார்…. சாலை தடுப்பில் மோதி பறந்த வீடியோ காட்சி….

naveen santhakumar

கொரோனாவால் காட்டு விலங்குகளுக்கு கிடைத்த சுதந்திரம்…. வைரலாகும் புகைப்படங்கள்….

naveen santhakumar

டிஸ்னி நிறுவனம்…. ஆயிரக்கணக்கில் பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயம்….

naveen santhakumar