இந்தியா உலகம்

சீனாவின் கொரோனா வைரஸால் மற்ற நாட்டு மக்களும் அவதி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சீன புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு இந்தியர்கள் பலர் வெளியேறி விட்ட நிலையில், மாணவர்கள் மற்றும் வேலைக்காக தனித்து வசிப்போர் மட்டுமே அங்கிருப்பதாக கூறப்படுகிறது.

Image result for சீனாவின் தேசிய சுகாதார கமிஷன்

அவர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அனுமதி கிடைக்கும் பட்சத்தில் சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஹாங்காங்கில் 5 பேரும், மெக்சிகோ மற்றும் தைவானில் 3 பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதை அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது.

ALSO READ  யுவராஜ் சிங் கைது- சில மணி நேரங்களில் ஜாமீனில் விடுவிப்பு - பின்னணி என்ன !

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களிலும், சீனாவில் இருந்து இந்தியா வரும் பயணிகள் அனைவரும் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே அனுமதி அளிக்கப்படுகின்றனர்.

Image result for எச்.ஐ.வி

ஊஹானில் இருந்து இந்தியா திரும்பிய 11 பேரில் 4 பேருக்கு பாதிப்பில்லை என மத்திய சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. கேரளாவில் 6 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவர் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ALSO READ  இறப்பு சான்றிதழ்: மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல் என்ன?

சீனாவில் மருத்துவம் படிக்கும் அவர் இந்தியா திரும்பிய நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Image result for Rajasthan Health Minister Raghu Sharma

மருத்துவமனையின் தனி வார்டில் அவர் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராகு சர்மா கூறியுள்ளார்.

அவரின் ரத்த மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

Image result for இரத்த மாதிரிகள்

அதன் முடிவுகள் வந்த பிறகே, கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Mostbet AZ-90 kazino azerbaycan Ən yaxşı bukmeyker rəsmi sayt

Shobika

சபரிமலை ஐயப்பனை தரிசிக்க தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி

News Editor

Mostbet Kz Онлайн Казино Ресми Сайты Слоттар + Two Hundred And Fifty Fs Мостбет Кз Официальный Сайт

Shobika