அரசியல் உலகம் தமிழகம்

சீனாவில் பரவும் கரோனா வைரஸ் : பாதுகாப்பின் உச்சத்தில் தமிழகம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சீனாவில் கரோனா வைரஸ் பரவியதால் மர்ம காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் கடந்த 2002ஆம் ஆண்டு சார்ஸ் என்ற வைரஸ் பரவியது. இந்த வைரஸ் சீனாவில் பரவிய சில வாரங்களிலேயே 37 நாடுகளுக்கு வேகமாக பரவியது.

இந்த வைரஸினால் மக்கள் மூச்சுக் கோளாறு போல பல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டனர்.இந்த வைரஸினால் உலகம் முழுவதும் 916 பேர் உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவில் கரோனா என்ற வைரஸ் கிருமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் கரோனா வைரசின் செயல்பாடுகள் சார்ஸ் வைரஸை போலவே உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ALSO READ  ரயில் நிலையத்தில் சும்மா நின்ற இளைஞரை சம்பவம் செய்த பெண்

இந்த கரோனா வைரசால் இதுவரை 1700 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ,2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.கரோனா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் இருக்க தமிழக சுகாதாரத் துறை கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு விமான நிலையத்தில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.

மேலும் கரோனா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் இருக்க போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது யாரும் அச்சம் கொள்ளவேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பாலியல் தொல்லையால் 11ம் வகுப்பு மாணவி தற்கொலை!

naveen santhakumar

வங்கி ஊழியர்கள் திட்டியதால் விவசாயி தற்கொலை…!

News Editor

16 பக்கத்திற்கு இறந்தவர்கள் குறித்த செய்திகள்… அமெரிக்காவில் அதிகரித்துக் கொண்டே செல்லும் கொரோனா மரணங்கள்….

naveen santhakumar