உலகம்

நண்பர்கள் மூலம் உலகை வலம்வரத் தொடங்கிய ’கெவன்’

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அமெரிக்காவில் வசித்து வரும் 32 வயதான கெவன், பிறவியிலேயே முதுகெலும்பு தசைநார் சிதைவு என்னும் மரபணுக் கோளாறால் பாதிக்கப்பட்டவர்.

கொடிய நோயால் பாதிக்கப்பட்ட கெவன், தன் இளமைக் காலம் முழுவதையும் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே கழித்துள்ளார். கெவன் சிறுவயதில் இருந்தே சாகசப் பயணங்களின் மீதும் இசை மீதும் தீராத ஆர்வமிருந்துள்ளது.

Image result for music symbol

பள்ளி,கல்லூரிகாலத்தில் அவர் பல்வேறு இசைக்குழுக்களில் பங்கெடுத்து வந்துள்ளார். அதன் மூலம் அவருக்கு, நான்கு நண்பர்கள் கிடைத்துள்ளனர். பிற்காலத்தில் நண்பர்கள் குழுவின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

ALSO READ  friendship படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாகும் ஹர்பஜன்

இவரின் பயணம் முதலில் தொடங்கியது 2015-ம் ஆண்டு ஐரோப்பாவிலிருந்து தான். பயணங்களின் போது மற்ற மாற்றுத்திறனாளிகளைப் போல சக்கர நாற்கலியில் வெறுமனே இருப்பதை கெவன் விரும்பவில்லை.

அது மலையேற்றம் உள்ளிட்ட சாகசங்களின் போது, மிகுந்த சிரமத்தை கெவினுக்கு ஏற்படுத்தியுள்ளது.

இதனை உணர்ந்த அவரது நண்பர்கள், முதுகில் சுமந்துச் செல்லக்கூடிய பிரத்யேக பை ஒன்றை உருவாக்கி உள்ளனர்.

அதன் உதவியோடு நண்பர்கள் துணையோடும் ஐரோப்பா,சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் செய்துள்ளனர். இதையடுத்து தன் பயண அனுபவங்களை தொகுத்து புத்தகமாக்கியுள்ளார், கெவன்.

ALSO READ  அமெரிக்க பொருளாதாரத்தை மீட்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் பொருளாதார ஆலோசகராக WWE Vince McMahon நியமனம்...

குறிப்பாக கெவன் நண்பர்களின் முதுகிலிருந்தபடி சீனப்பெருஞ்சுவரை ரசிக்கும் படங்கள் “we carry kevan” சமூக வலைதளங்களில் டிரெண்டாகியுள்ளது.

https://www.facebook.com/mtvasia/videos/165954608082263/

இதன் தொடர்ச்சியாக இந்த நண்பர்கள் குழு அதே பெயரில் தொண்டு நிறுவனத்தை உருவாக்கி பலருக்கு உதவ தொடங்கியுள்ளனர்.

பொதுவாக மாற்றுத்திறனாளிக்கென பல பொது இடங்களில் பிரத்யேக வசதிகள் இருப்பதில்லை. முதுகில் சுமந்துச் செல்லக்கூடிய பிரத்யேக பை போன்ற கண்டுபிடிப்புகள் மாற்றுதிறனாளிகளுக்கும் பயனளிக்கும் என கருத்து தெரிவிக்கிறார் கெவின்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பண்டையக்கால பாடலை கண்முன் நிறுத்திய பூங்கா… 

naveen santhakumar

உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வருகை..

Shanthi

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க களமிறங்கும் MISS ENGLAND…. 

naveen santhakumar