உலகம்

உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வருகை..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

“ஜி20 மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பங்கேற்க, இந்தியா அழைப்பு விடுக்க வேண்டும்” என கோரிக்கை வைக்க உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் எமின் தபரோவா இன்று இந்தியாக்கு வருகை தர உள்ளார்.

உக்ரைன்-ரஷியா போர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. இந்நிலையில், உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் எமின் தபரோவா நான்கு நாள் பயணமாக இன்று இந்தியா வர உள்ளார். இந்த பயணத்தில், வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி, பாதுகாப்பு துணை ஆலோசகர் விக்ரம் மிஸ்ரி ஆகியோரை சந்திக்க உள்ளதாகவும், மேலும் பிரதமர் மோடியை சந்தித்து உக்ரைனுக்கு வருமாறு அழைப்பு விடுக்க உள்ளதாகவும், உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கவேண்டும் என கோரிக்கை வைக்கவுள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த பயணத்தின் மிக முக்கிய நோக்கமாக, “ஜி20 மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பங்கேற்க, இந்தியா அழைப்பு விடுக்க வேண்டும்” என கோரிக்கை வைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனுக்கு எதிராக ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்திய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.


Share
ALSO READ  மத்திய பட்ஜெட்டில் முக்கியத்துவம் தரப்பட்ட 8 அம்சங்கள் !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி மருந்திற்கு மெக்சிகோ அனுமதி:

naveen santhakumar

29 பேரை மட்டுமே கொண்ட கிராமம்: 8 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த ஆண் குழந்தை- கொண்டாட்டத்தில் திளைத்த கிராமம்…

naveen santhakumar

“கொரோனா தடுப்பூசி ரெடி”- களத்தில் இறங்கிய இத்தாலி…

naveen santhakumar