உலகம்

மீண்டும் ஆரம்பித்த சீனர்கள்… பச்சையாக பாம்பை தின்றவர் கவலைகிடம்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சமைக்காத பாம்பை சாப்பிட்டதால் நுரையீரல் முழுவதும் புழுக்களை பெற்ற சீன நபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சீனாவிலிருந்து தற்போது உலகெங்கும் பரவி வரும் இந்த கொரோனா வைரஸ் வீரியம் குறையாத இந்த சமயத்தில், மீண்டும் இறந்த பாம்பை சமைக்காமல் சாப்பிட்ட வாங் என்ற நபருக்கு நுரையீரல் முழுவதும் புழுக்கள் உருவாகியுள்ளது.

சீனாவின் ஜியாங்சு (Jiangsu) மாகாணம் சுகியான் (Suqian)-ஐ சேர்ந்த வாங்கிற்கு கடந்த சில நாட்களாக அதிகப்படியான வயிற்றுவலி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற வாங்கிடம் அவரது உணவு பழக்கத்தைப் பற்றி விசாரித்துள்ளனர் மருத்துவர்கள். ஆனால், அவர் கடல் உணவுகள் தான் அதிகம் சாப்பிட்டதாக கூறியுள்ளார்.

இதனால் அடுத்தகட்டமாக வாங்கின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள், நுரையீரல் முழுவதும் புழுக்களாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து வாங்- கிடம் மருத்துவர்கள் விசாரித்ததில் இறுதியாக தான் ஒரு பாம்பினை சமைக்காமல் பச்சையாக சாப்பிட்டதாக ஒப்புக்கொண்டார். இதுபோல் சமைக்காத இறைச்சிகளை உண்பதால் பாராகோனிமியாஸின் ( paragomiasis) எனும் நோய்கள் ஏற்படுவதாக  மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் வாங்கிற்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது பற்றி நுரையீரல் நிபுணர் Dr. ஸாவ் ஹையான் (Zhao Haiyan) கூறுகையில்:-

ALSO READ  பொலிவியா அதிபர் ஜீனைன் அனெசுக்கு கொரோனா... 

பெரும்பாலும் கடல் உணவுகள் மற்றும் ஊர்வன போன்றவற்றை சமைக்காமல் சாப்பிடுவது மிகவும் ஆபத்து ஏனெனில் இவற்றில் நாடாபுழுவின் ஓட்டைகள் இருக்கும் இது வயிற்றுக்குள் சென்றால் நமக்கு தீங்கு விளைவிக்கும் இதேபோன்று சுகாதாரமற்ற நீரைப் பருகுவதாலும் உடல் உபாதைகள் ஏற்படும்.  எனவேதான் மக்களை உணவு விஷயத்தில் கவனமாக இருக்குமாறு பல்வேறு முறை வலியுறுத்தி வருகிறோம் என்றார்.

ALSO READ  முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குக் கொரோனா வராது; வந்தாலும் உடனே போய்விடும்- செல்லூர் ராஜூ 

சீனாவில் மக்கள் வவ்வால், பாம்பு, எலி, எறும்பு தின்னி, முதலை போன்ற கண்ணில் பார்க்கும் அனைத்தையும் உண்ணும் பழக்கத்தை கொண்டவர்கள்.

வவ்வால்களை சாப்பிட்டதால் தான் கொரோனா வைரஸ் பரவியது என ஒரு சில ஆய்வு முடிவுகள் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது பாம்பினை சாப்பிட இவருக்கு நுரையீரல் முழுவதும் புழுக்கள் உருவாகிய சம்பவம் சீன மருத்துவர்களிடையே அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக சீனர்களின் உணவு பழக்கத்தை கடுமையாக விமர்சித்து பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தியாவின் மூவர்ணக் கொடியை தனது நாட்டிலுள்ள மலைச்சிகரத்தில் ஒளிரச் செய்த ஸ்விட்சர்லாந்து…காரணம் என்ன தெரியுமா???

naveen santhakumar

இங்கிலாந்தில் 12-15 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி…

Shobika

உலகின் மிகவும் வலிகள் நிறைந்த பணியை செய்து வருகிறோம்.. இங்கிலாந்து நர்ஸின் வேதனை பதிவு…

naveen santhakumar