உலகம்

இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு வழங்கப்படுகிறது:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு, மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்படுகிறது.

2020ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் நேற்று அறிவிக்கப்பட்டது. ஹெபாடிடிஸ் சி வைரஸ் என்ற கிருமியை கண்டுபிடித்ததன் விளைவாக ஹார்வி ஜே. ஆல்டர், மைக்கேல் ஹவுடன் மற்றும் சார்லஸ் எம். ரைஸ் ஆகிய மூன்று பேருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.பிரிட்டனைச் சேர்ந்த ரோஜர் பென்ரோஸ், ஜெர்மனியின் ரெய்ன்ஹார்ட் ஃகென்சல் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆண்டிரியா கெஸ் ஆகிய மூன்று பேருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

ALSO READ  ஆற்றில் மூழ்கி மூவர் உயிரிழப்பு:

“கருந்துளை உருவாக்கம் என்பது பொதுச் சார்பியல் கோட்பாட்டின் வலுவான முன்கணிப்பு என்பதை கண்டுபிடித்தற்காக” ரோஜர் பென்ரோசுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது. “விண்மீன் திரளில் உள்ள நெருக்கமான மற்றும் அதிக எடை கொண்ட விண் பொருள் குறித்த ஆராய்ச்சிக்காக” மற்ற இருவருக்கு பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மனித உயிர் அணு பற்றிய 300 ஆண்டுகளாக நீடித்த கருத்து பொய்யானது…

naveen santhakumar

எங்களை நிர்வாணமாக அனுப்புகிறார்கள்- செவிலியர்கள் போராட்டம்…….

naveen santhakumar

உலகில் 8 கோடியை நெருங்கியது கொரோனா தொற்று ..!

News Editor