உலகம் சாதனையாளர்கள்

யூடியூப் சேனலில் மதிப்பீடு செய்து ஆண்டுக்கு 185 கோடி சம்பாதிக்கும் சிறுவன்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டிவி சேனல்களைப்போல் ‘யூடியூப்’ சேனல்களை ஆரம்பித்து அதன் மூலம் பணம் ஈட்டுபவர்கள் அதிகளவில் உள்ளனர். உலகளவில் ‘யூடியூப்’ சேனல் மூலம் அதிகளவில் சம்பாதிப்போரின் பட்டியலை அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான பட்டியலில், ஆச்சரியமான விஷயம், பட்டியலில் முதல் இடத்தில்  இருப்பது ஒரு சிறுவன். அவன், அமெரிக்காவை சேர்ந்த ரியான் காஜி (8). இவன் தனது ‘யூடியூப்’ சேனல் மூலம் ரூ.184 கோடி சம்பாதித்து முதல் இடத்தை பிடித்துள்ளான்.

ALSO READ  பாகிஸ்தானில் வெட்டுகிளி படையெடுப்பை அடக்க வரும் சீனாவின் வாத்து ராணுவம்



ரியான் பொம்மைகள், விளையாட்டுப் பொருட்கள் மீது பெரும் ஆர்வம் கொண்டவன். அதை அக்குவேறு, ஆணிவேராக பிரித்து மீண்டும் இணைத்துவிடுவான். இவனது திறமையை பார்த்த பெற்றோர், அவனது செயலையே ஒரு ‘யூடியூப்’  சேனலாக்கிவிட்டனர். அதாவது, ‘ரியான் வேர்ல்டு’ என்ற பெயரில் இவர்கள் சேனல் ஒன்றை உருவாக்கி, அதில் சந்தையில் புதிதாக வரும் பொம்மைகள், விளையாட்டுப் பொருட்களின் செயல்பாடுகளை ரியான் ஆய்வு செய்து பேசுவான்.

2015ம் ஆண்டு முதல் ரியான் வேர்ல்டு ‘யூடியூப்’ சேனல் இயங்கி வருகிறது. தற்போது ரியான் வீடியோக்களை உலகம் முழுவதும் மக்கள் பார்த்து வருவதால், பல வீடியோக்கள் 100 கோடி பார்வைகளையும் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்தபடியாக, ரஷ்யாவைச் சேர்ந்த 5 வயது சிறுமி அனஸ்டாசியா ரத்ஜின்ஸ்காயா ரூ.128 கோடி சம்பாதித்து 3வது இடத்தில் உள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கம்பளா சீனிவாச கவுடாவின் சாதனை முறியடிப்பு…

naveen santhakumar

ஆப்கனிலிருந்து வெளியேறிய கடைசி அமெரிக்க ராணுவ வீரர்- தாலிபன்கள் அறிவிப்பு !

naveen santhakumar

தங்கையை காக்க வீரசாகசம்… முகத்தில் 90 தையல்… 6 வயது சிறுவனின் பாசம்… 

naveen santhakumar