உலகம்

கடத்தல்காரர்களிடம் இருந்து ஹீரோவாக மாறி கோடீஸ்வர தந்தையை மீட்க தனயன்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

குவாங்டாங்க்:-

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் துப்பாக்கி முனையில் கடத்திய கும்பலிடமிருந்து அவரது மகன் ஹீரோவாக மாறி காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உலக பணக்காரர்களில் பலர் சீனாவில் இருக்கிறார்கள். இவர்களில் முக்கியமானவர் ஹே ஸியாங்ஜியான் (77) (He Xiangjian). உலகின் மிகப்பெரிய மின்னணு உதிரிபாக உற்பத்தி நிறுவனமான மீடியா (Midea)  நிறுவனத்தை நிறுவியவர் இவர்தான்.

உலகளவில் 40வது பெரிய பணக்காரராக உள்ளார். ஹே ஸியாங்ஜியான் சீனாவின் 6வது பெரிய பணக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது. மீடியா நிறுவனத்தை 1968-ல் உருவாக்கி அதை உலகின் முன்னணி நிறுவனமாக மாற்றியவர்தான் ஹே ஜஸியாங்ஜியான். முரளி நிகர சொத்து மதிப்பு 23 பில்லியன் டாலர்கள். 

இவர் தனது குடும்பத்தோடு தனியாக இருக்கிறார். தென் சீனாவின் குவாங்டாங்க் (Guangdong) ஃபோஷன் (Foshan) ஜூன்லான் (Junlan) என்ற கிராமத்தில் காட்டுக்குள் பெரிய மாளிகை (Villa) கட்டி தனியாக குடும்பத்தோடு வசித்து வருகிறார். 

ALSO READ  கொரோனா நோயாளிகளுக்காக விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் பயன்படுத்திய வெண்டிலேட்டர் வழங்கிய குடும்பத்தினர்....

இந்நிலையில் வெளியே சென்று வீட்டிற்கு திரும்பும் போது அவரை ஒரு கும்பல் காரில் மறைத்து கடத்தி இருக்கிறார்கள். துப்பாக்கி முனையில் ஹே ஸியாங்ஜியானை கடத்திய கும்பல் அவரை அவரின் வீட்டிற்கே அழைத்து சென்று இருக்கிறார்கள். 

ஹே ஸியாங்ஜியானை அவரது மாளிகைக்கு கடத்தி சென்ற கும்பல், அவரை வீட்டில் கட்டி போட்டனர். அவரது மகன் மற்றும் மனைவியையும் வீட்டில் வேறு அறையில் கட்டிப்போட்டு இருக்கிறார்கள். பல கோடி பணம் கொடுத்தால்தான் உங்களை விடுவோம் என்று கூறியுள்ளனர். வீடு முழுவதும் உள்ள அனைத்து கதவுகளையும் மூடிவிட்டு அதில் டெட்டனேட்டர் வைத்துள்ளனர். சுமார் இரண்டு மணி நேரம் இவர்கள் இப்படி பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்தனர். 

அப்போது சுதாரித்துக் கொண்ட ஹே ஜியாங்ஜியானின் 55வயது மூத்த மகன் அங்கிருந்து ஜன்னலை உடைத்துக் கொண்டு தப்பியுள்ளார். இதில் அவரின் ஒரு கை முறிந்தது என கூறப்படுகிறது. ஜன்னலை உடைத்துக் கொண்டு வெளியே சென்றவர், அங்கிருந்து காட்டுக்குள் குதித்து ஓடி அங்கிருந்த நதியில் நீச்சல் அடித்து அடுத்த கரைக்கு சென்றுள்ளார். நதி கரையை கடந்தவர், அங்கு சாலையில் இருந்தவர்களிடம் உதவி கேட்டு போன் வாங்கி போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து ஹெலிகாப்டரில் போலீசார் கொண்டு வரப்பட்டு, அந்த வீடு மீது இறக்கப்பட்டனர். கடத்தல்காரர்கள் நவீன ஆயுதம் வைத்து இருந்ததால், போலீசும் நவீன ஆயுதத்துடன் உள்ளே சென்றுள்ளனர். கிட்டத்தட்ட இரண்டு மணி நேர போராட்டத்துக்கு பினகு போலீசார் ஹே ஜியாங்ஜியானை மீட்டனர். 

ALSO READ  கொரோனா அதிகரிப்பு: குழந்தைகளுக்கு தடுப்பூசி கட்டாயம்.. அதிரடி அறிவிப்பு!

இந்த மீட்பு பணியில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே சுமூக தீர்வு எட்டப்பட்டது. கடத்தல்காரர்கள் 5 பேரின் நவீன ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.  கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

காபூலில் பாதுகாப்பு அமைச்சர் வீட்டு முன்பு தாக்குதல் – 4 பேர் பலி

Shobika

தொலைந்து போய் ஐந்தாண்டுகள் கழித்து கிடைத்த பூனை- உரிமையாளர் நிகழ்ச்சி

Admin

இங்கிலாந்து அரச குடும்பத்தை சேர்ந்த ஹாரி- மேகன் தம்பதிக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது :

Shobika