உலகம்

தொலைந்து போய் ஐந்தாண்டுகள் கழித்து கிடைத்த பூனை- உரிமையாளர் நிகழ்ச்சி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தொலைந்து போய் ஐந்தாண்டுகள் கழித்து கிடைத்த பூனை- உரிமையாளர் நிகழ்ச்சி

வீட்டில் இருந்து தொலைந்து போய் 5 ஆண்டுகள் கழித்து மீண்டும் உரிமையாளரிடம் அவர் வளர்த்து வந்த பூனை திரும்ப கிடைத்தது.

அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் போர்ட்லேண்ட் பகுதியைச் சேர்ந்த ஒருவர் சாஷா எனும் கருப்பு நிறப் பூனை வளர்த்து வந்தார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் திடீரென ஒருநாள் சாஷா காணாமல் போனது. அதன் உரிமையாளர் எங்கு தேடியும் பூனையை கண்டு பிடிக்க முடியவில்லை. இதனால் கவலை அடைந்த அவர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து விட்டு வீடு திரும்பினார்.

ALSO READ  அமெரிக்காவில் புலிக்கும் கொரோனா வைரஸ்.....

இந்நிலையில் ஓரியான் மாகாணத்திலிருந்து 5000 கிலோமீட்டர் தொலைவில் உள்ளூர் வனவிலங்கு காப்பகம் மூலம் பூனை கண்டுபிடிக்கப்பட்டது. அதன் உடலில் பொருத்தியிருந்த சிப் மூலம் அதன் உரிமையாளர் விவரம் குறித்து அடையாளம் தெரிந்து கொண்ட விலங்குகள் காப்பகம் சில தினங்களுக்கு முன் விமானத்தில் அந்த பூனையை ஏற்றி வந்து உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். சாஷாவை கண்ட அதன் உரிமையாளர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து உரிமையாளர் கூறும்போது, ஐந்தாண்டுகளுக்கு முன் தொலைந்து போன பூனையை எங்கு தேடியும் கிடைக்காததால் தேடும் பணியை கைவிட்டதாகவும் அது திரும்ப கிடைக்கும் என்று நம்பிக்கை இல்லாத நிலையில் வாழ்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரஷ்யாவில் கடுமையான நிலநடுக்கம்…ரிக்டரில் 6.4 ஆக பதிவு..

naveen santhakumar

ஸ்புட்னிக்-வி தடுப்பு மருந்தை இந்தியாவுடன் இணைந்து அதிகளவில் தயாரிக்க ரஷ்யா தீவிரம் :

naveen santhakumar