உலகம்

தென் ஆப்பிரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் கொரோனாவால் பலி….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜோஹனஸ்பர்க்:-

இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல வைராலஜி நிபுணர் கீதா ராம்ஜி (Gita Ramjee) தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸுக்குப் பலியாகி உள்ளார். 

கீதா ராம்ஜி ஒருவாரத்துக்கு முன் லண்டனிலிருந்து திரும்பியுள்ளார். ஆனால் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதற்காக அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.

இவர் தென் ஆப்பிரிக்க இந்திய வம்சாவளி பார்மசிஸ்ட் பிரவின் ராம்ஜியை இவர் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கீதா ராம்ஜி ஒரு நோய் தடுப்பு மருந்து (Vaccine) ஸ்பெஷலிஸ்ட். ஹெச்.ஐ.வி. தடுப்பு ஆராய்ச்சியில் முன்னணியில் இருப்பவர். 

ALSO READ  கொரோனா வைரஸை முதன்முதலில் கண்களால் கண்ட பெண் மருத்துவர்... அது குறித்து அவரது பேட்டி...

டர்பனில் உள்ள தென் ஆப்பிரிக்க மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (South African Medical Research Council (SAMRC)) ஹெச்.ஐ.வி தடுப்பு ஆராய்ச்சி குழுவில் இயக்குனர் மற்றும் முதன்மை மருத்துவ ஆராய்ச்சி நிபுணர் ஆவார்.

இவரது மறைவால் வைரஸ் ஆய்விலும் ஹெச்.ஐ.வி. தடுப்பு ஆய்விலும் பெரும் பின்னடைவு ஏற்படும் என்றும் இவரது மறைவால் பெரும் சோகம் அடைந்துள்ளதாக தென் ஆப்பிரிக்க மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் மற்றும் CEO கிளண்டா கிரே (Glenda Gray) கூறினார்.

ALSO READ  கடுமையாகும் கட்டுப்பாடுகள்; தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிப்பு..!

2018-ல் கீதாராம்ஜிக்கு லிஸ்பனில் தனித்துவமான பெண் விஞ்ஞானி விருது European Development Clinical Trials Partnerships (EDCTP)- ஆல் வழங்கப்பட்டது. 

ஹெச்.ஐ.வி தடுப்பு ஆய்வுக்காக 2012-ல் வாழ்நாள் சாதனை விருது இவருக்கு வழங்கப்பட்டது. அவர் 170க்கும் மேற்பட்ட மருத்துவ ஆய்வுக்கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார். பல அறிவியல் இதழ்களுக்கு இவர் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் இதுவரை 5 பேர் கோவிட்-19 காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்த ஆப்பிள் ஒரு வருடத்திற்கு கெட்டு போகாதாம்…!

Admin

சீனா PPE-களை பதுக்கி வைத்து கொள்ளை லாபத்திற்கு விற்பதாக வெள்ளை மாளிகை குற்றச்சாட்டு.. 

naveen santhakumar

மனுஷன் கேக் வெட்டி பார்த்திருப்பீங்க…..ஆனால் இங்க மனுஷனையே கேக் ஆக்கி வெட்டிட்டாங்க…..

naveen santhakumar