உலகம்

கொரோனா குழப்பத்தை பயன்படுத்தி ஊடுருவிய ரஷ்யா.. தடுத்து நிறுத்திய பிரிட்டன்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இங்கிலாந்து நாட்டில் கடும் கொந்தளிப்பும் குழப்பமும் நிலவுகிறது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி ரஷ்யா ஆங்கில கால்வாய் மற்றும் வட ஆர்டிக் கடலில் தனது கப்பல் படை மூலம் ஊடுருவலை நிகழ்த்தியுள்ளது

ரஷ்யாவின் 7 கப்பல்கள் (இரண்டு பீரங்கி தாங்கிய கப்பல்கள், மூன்று சிறிய போர்க்கப்பல்கள், 2 விமானம் தாங்கி கப்பல்கள்) மற்றும் இரண்டு விமானங்கள் அடங்கிய குழு வட ஆர்டிக் கடல் மற்றும் ஆங்கிலக் கால்வாய் பகுதியில் அத்துமீறி ஊடுருவியது.

இதனை தனது ஸ்டேட் ஆப் ஆர்ட் (State-Of-Art)  ரேடார்கள், சென்சார்கள் மற்றும் சர்வேலன்ஸ் கேமராக்கள் மூலமாக பிரிட்டிஷ் ராயல் நேவி கண்காணித்து வந்தது.

ALSO READ  மூன்றாவது அலை துவக்கம்- விஞ்ஞானிகள் எச்சரிக்கை ...!

இதையடுத்து பிரிட்டிஷ் ராயல் கப்பற் படையைச் சேர்ந்த ஒன்பது போர்க்கப்பல்கள் உடனடியாக களத்தில் இறங்கியது. இதற்கு உதவியாக 2 ஆயுதம் தாங்கிய ஹெலிகாப்டர்கள் உடன் பயணித்தது. ரஷ்யாவின் இந்த ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது என ராயல் நேவி தெரிவித்தது.

பிரிட்டன் கடற்படை ரஷ்யாவிற்கு அனுப்பிய செய்தியில்:-

ALSO READ  பிரிட்டன் அரச குடும்பத்திலிருந்து முதன்முதலாக இளவரசர் வில்லியம் வெளியிட்டுள்ள வீடியோ...

எத்தகைய கொந்தளிப்பான, குழப்பமான சூழ்நிலையிலும் எங்கள் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் நாங்கள் அசட்டையாக இருக்க மாட்டோம் என்று கூறியுள்ளது.

இதனை தொடர்ந்து பிரிட்டன் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தியுள்ளது.

ஆனால் ரஷ்யா தரப்பில் இது வழக்கமாக நடைபெறும் கப்பற்படை ஒத்திகை தான் என்று கூறியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா பரவாமல் தடுக்க பிறந்த குழந்தைக்கு முககவசம்….

naveen santhakumar

சர்வதேச உயிரியல் பன்முகத்தன்மை தினம்…

naveen santhakumar

நாள் ஒன்றிற்கு 400 முறை சுயஇன்பம் செய்த பெண் மருத்துவமனையில் அனுமதி….

naveen santhakumar