இந்தியா

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவளிக்கிறது Modi Kitchen

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கஷ்டப்படும் ஏழை மக்களுக்கு உதவுவதற்காக முசௌரி எம்.எல்.ஏ கணேஷ் ஜோஷி ‘மோடி கிட்சன்’ (Modi Kitchen) என்ற அமைப்பை ஆரம்பித்து அதன்மூலம் மக்களுக்கு உணவு வழங்கி வருகிறார்.

பிரதமர் மோடி கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மக்கள் அனைவரும் சமூக விலக்கை (Social Distancing) கடைபிடிக்குமாறு கேட்டுக்கொண்டார். முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இதையடுத்து அக்கட்சி உறுப்பினர்கள் கஷ்டப்படும் மக்களுக்கு உணவு வழங்க வருகின்றனர்.

இந்த ‘மோடி கிட்சென்’ தற்பொழுது ராஜ்பூர் (Rajpur), ஜகான் (Jakhan), டாக்ரா (Dakra), டோவல்வாலா (Dovalwala) ஆகிய நான்கு பகுதிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  கொரோனா பரவல் காரணமாக சபரிமலைக்கு பக்தர்கள் வரவேண்டாம்- தேவசம் போர்டு.....

இதுகுறித்து கணேஷ் ஜோஷியிடம் கேட்டபொழுது:-

இங்கு பெரும்பாலான மக்கள் கூலி வேலை செய்பவர்கள் குறிப்பாக கட்டிட தொழிலாளிகள். இவர்கள் புறநகர் மற்றும்

கிராமப்புறப் பகுதிகளில் வசிக்கின்றனர். தற்பொழுது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் இவர்கள் உணவுக்கு கஷ்டப்படுகிறார்கள். எனவே அவர்களுக்கு உதவுவதற்காக இந்த அமைப்பை ஆரம்பித்து அவர்களின் வீடுகளுக்கு சென்று உணவு வழங்கி வருகிறோம். அதேவேளையில் சமூக விலகலையும் கடைப்பிடிக்கிறோம் என்றார்.

ALSO READ  ஒமைக்ரான் தொற்று அச்சம் : தடுப்பூசிகளை பதுக்கி வைக்கும் அபாயம் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Azerbaycanda etibarlı bukmeker kontor

Shobika

வறுமையிலும் சாதிக்க துடித்த மாணவனுக்கு ரேஸ் சைக்கிள் வழங்கிய குடியரசுத் தலைவர்… 

naveen santhakumar

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை: இஸ்லாமிய வழக்கறிஞருக்கு முதல் அழைப்பிதழ்… 

naveen santhakumar