உலகம்

வாங்க அழுது கொட்டி தீர்க்கலாம் : ஸ்பெயினில் அழுவதற்கென்று தனி அறை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஸ்பெயின் :

கண்ணீர் விட்டு அழுது கொட்டி தீர்த்தால் மனம் நிம்மதியடையும் என கருதுபவர்கள் உலகில் மிக அதிகம் பேர் உள்ளனர். இவர்களுக்காவே ஸ்பெயின் நாட்டில் உள்ள மாட்ரிக் நகரில் அழுவதற்கென்று தனி அறை ஏற்படுத்தி உள்ளார்கள்.

A man stands next to a graffiti that reads "crying is brave" in a crying space named 'La Lloreria' to raise awareness about mental health in Madrid, Spain, October 17, 2021. REUTERS/Juan Medina

வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என பழமொழி உண்டு. அதுபோல் கண்ணீர் விட்டு கதறி அழுதால் கவலை மறைந்து விடும்.

கவலை மற்றும் மன நல பிரச்னைகள் உள்ளவர்களுக்காகவும், துயரைச் சொல்லி அழுது ஆறுதல் அடைய ஆள் இன்றி தவிப்பவர்களுக்காகவும் ஸ்பெயின் நாட்டில் மாட்ரிக் நகரில் தனி அறையை உருவாக்கி உள்ளனர் என்பது சிறப்புக்குரிய விஷயம்.

Inside Mental Health Care For Families Separated at the Border | Time

அழுகையை அடக்க அடக்க மன அழுத்தம் மேலும் அதிகரிக்கும்.இதனால் ரத்த கொதிப்பு உள்பட பல நோய்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் கவலை இருந்தால் உடனே கண்ணீர் விட்டு அழ வேண்டும் என மனநல மருத்துவர்கள் கூறுவதுண்டு.

ALSO READ  கொரோனா வைரஸை பரப்பியதற்காக, சீனாவிடம் நஷ்ட ஈடு கோரும் ஜெர்மனி...

அழுகை அறைக்கு உங்களை வரவேற்கிறோம் என்ற விளம்பர பலகை பாதிக்கப்பட்டவர்களை வரவேற்கிறது இந்த மையம். மனநல பிரச்சனையால் அதிகரித்து வரும் தற்கொலைகளை தடுக்கும் வகையில் இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக உளவியல் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ALSO READ  மக்களுக்கு இலவச ரயில் பயணம்!
A woman poses for a photo inside a cage at a crying space named 'La Lloreria' to raise awareness about mental health in Madrid, Spain, October 17, 2021. The message displayed on cage reads: "I also have anxiety". REUTERS/Juan Medina

அழுகை அறையில் உளவியல் மருத்துவர் உட்பட மனச்சோர்வடையும் போது அழைக்கக்கூடிய நபர்களின் பெயர்களுடன் தொலைபேசிகள் உள்ளன. அழுக வேண்டும் என தோன்றும் போது தொடர்பு கொண்டு பேசி ஆறுதல் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த அழுகை அறைக்கு வரவேற்பு அதிகரித்து வருவதோடு பலரும் அழுகை அறைக்கு வந்து அழுது ஆறுதல் பெற்று வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உலக நிலையான சிறப்பாக உண்ணும் கலை தினம்…

naveen santhakumar

தாய்ப்பாலால் மூச்சு திணறி துடிதுடித்த குழந்தை : காப்பாற்றிய காவலர்கள்

Admin

போதும்… போதும்… வாங்க பூமிய காப்பாத்துவோம் – இங்கிலாந்து இளவரசர் வில்லியம்

News Editor