உலகம்

பெய்ஜிங் கடல் உணவு மார்க்கெட்டில் கடுமையான கொரோனா வைரஸ் தொற்று தடயங்கள் கண்டுபிடிப்பு…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பெய்ஜிங்:-

பெய்ஜிங் நகரில் கடல் உணவு மற்றும் இறைச்சி சந்தையில் கடுமையான கொரோனா வைரஸ் தொற்று தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

பெய்ஜிங் நகரில் கடல் உணவுச் சந்தையில் புதிய கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது முன்னர் இருந்ததைவிட மிகவும் கடுமையாக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கடலுணவு சந்தையில் நிலவும் குறைந்த வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக இந்த தொற்று பெருகி உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

பெய்ஜிங் நகரில் உள்ள ஸின்பாடி (Xinfadi) கடல் உணவு சந்தை மிகப்பெரியது. இதன் வேர்ஹவுஸ், விற்பனை பகுதி என இந்த சந்தை கிட்டத்தட்ட 160 கால்பந்து மைதானம் அளவு பெரியது. கடந்த வாரத்தில் இந்த சந்தைக்கு சென்று வந்தவர்கள், இந்த சந்தையில் பணிபுரியும் தொழிலாளர்கள், இதன் அருகில் வசிப்பவர்கள் என நூற்றுக்கணக்கான அவர்களுக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 

இந்தப் புதிய வைரஸ் தொற்று சால்மன் மீன்கள் மூலம் பரவுகிறது என்ற சந்தேகம் ஏற்பட்டதையடுத்தை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளிலிருந்து சால்மன் மீன்கள் இறக்குமதி செய்வதை சீனா தடை செய்துள்ளது. ஏனெனில் சால்மன் மீன்கள் வெட்டப்பட்ட இடத்தில் கத்தி, சால்மன் மீன் துண்டுகள், வெட்டும் பலகையை ஆகியவற்றில் வைரஸ் தடையங்கள் கண்டறியப்பட்டுள்ளது. 

ALSO READ  மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜாக்கி-உர்-ரஹ்மான் கைது..!

சீனாவின் நோய்த்தொற்று கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தலைமை தொற்று நோய் இயல் நிபுணர் (Chief epidemiologist at the Chinese Center for Disease Control and Prevention) வூ ஸன்யு (Wu Zunyou) கூறுகையில்:-

ALSO READ  தமிழகத்தில் இன்றைக்கும் இவ்வளவு பேருக்கு கொரோனாவா?

கடலுணவு சந்தைகளில் நிலவக் கூடிய குறைந்த வெப்பநிலையை மற்றும் அதிக ஈரப்பதம் இது போன்ற வைரஸ்கள் பெருக உகந்த சூழ்நிலையாக உள்ளது. தற்பொழுதைய சால்மன் மீன்களில் புதிய வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே மக்கள் பச்சையாக சால்மன் மீன்கள் இறைச்சி உண்பதை தவிர்க்க வேண்டும் ன. மேலும் கடல் உணவு சண்டைகளில் நிலவும் மிக மோசமான சுகாதாரம் வைரஸ்களில் எளிதில் தாக்குவதற்கு வசதியாக அமைகிறது என்று கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

துப்பாக்கியுடன் தலிபான்கள் – “தில்” பெண் செய்தியாளர்- என்ன நடக்கிறது ஆப்கனில் …???

naveen santhakumar

கொரோனா வைரஸ் பாதிப்பு : சீனாவில் 10 நாட்களில் புதிய மருத்துவமனை

Admin

துபாயில் பாராட்டு வாங்கிய இந்தியர்:

naveen santhakumar