உலகம்

சிறுபான்மையின இஸ்லாமிய பெண்களுக்கு கட்டாய கருத்தடை; ஆண்கள் மீது தீவிரவாத முத்திரை…. 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜின்ஜியாங்:-

சீனாவில் சிறுபான்மை மக்கள் தொகையை குறைக்கும் வகையில் உய்குர் முஸ்லிம் பெண்களுக்கு கட்டாய கருத்தடை செய்யும் நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப் படுத்தியுள்ளனர்.

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் மொழி பேசும் உய்குர் இன மக்கள் அதிகமாக வசிக்கின்றனர். இவர்கள் முஸ்லிம்கள் ஆவர். இவர்களைத் தவிர, வேறு சில சிறுபான்மை இனத்தவரும் இந்த மாகாணத்தில் வசிக்கின்றனர். இந்த சிறுபான்மையினரின் மக்கள் தொகையை குறைப்பதற்கான முயற்சியில் சீன அரசு கடந்த சில ஆண்டுகளாகவே தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

உய்குர் மக்களில் பலரை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி தடுப்பு காவல் முகாம்களில் அடைத்து வைத்துள்ளனர். தடுப்பு காவல் முகாம்களில் ஏறத்தாழ ஒரு உயிர் இருக்கும் உய்குர் முஸ்லிம்கள் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும், சிறுபான்மை மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு, சீன அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று அதிரடிச் சோதனையும் நடத்தி வருகின்றனர். எந்த வீட்டிலாவது இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், அவர்களுக்கு அளவுக்கு அபராதம் விதிக்கின்றனர். அபராதம் செலுத்தாதவர்களை வலுக்கட்டாயமாக தடுப்பு முகாம்களில் அடைக்கின்றனர். மேலும், திருமணமான சிறுபான்மையின பெண்கள் கர்ப்பமானால், அது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர்.

ALSO READ  சீனாவை சீண்டிய வாஷிங்டன் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (WSJ) - பத்திரிக்கையாளர்களைவெளியேற்றிய சீனா...

இதுகுறித்து குல்நர் ஒமிர்ஸக் (Gulnar Omirzakh) என்ற சீனாவில் பிறந்த கஸக் (Kazakh) இன பெண் கூறுகையில் தனது வீட்டில் மூன்று குழந்தைகள் இருந்த காரணத்தால் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு 2700 டாலர்கள் அளவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அந்த பெண்களுக்கு கருத்தடை சாதனங்களை பொருத்துவது, மருந்து, மாத்திரை கொடுத்து கருகலைப்பது போன்ற கொடூரமான நடவடிக்கைகளிலும் சீன அதிகாரிகள் ஈடுபடுவதாக, அட்ரியன் சென்ஸ் (Adrian Zenz) நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 


The German Data Diver Adrian Zens Who Exposed China’s Muslim Crackdown…

பெண்களுக்கு கருத்தடை மாத்திரைகள் கொடுத்தும் அல்லது ஊசி செலுத்தப்பட்டு அவர்களின் மாதவிடாய் தடுக்கப்படுவதாக சென்ஸ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. உய்கர் மக்கள் தவிர மற்ற சிறுபான்மை மக்களிடமும் கருப்பை இயக்க சோதனை கருவிகள் மூலம் (Intrauterine devices) சோதனைகள் நடத்தப்பட்டு அவர்களின் மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து உய்கர் மக்கள் கூறுகையில்:-

‘மூன்று குழந்தைகள் வரை பெறுவதற்கு எங்களுக்கு சீன சட்டம் அனுமதி அளித்துள்ளது. ‘ஆனால், அதிகாரிகள் அதை பொருட்படுத்தாமல், எங்கள் மக்கள் தொகையை குறைப்பதில் தான் கண்ணாக இருக்கின்றனர்’ என்கின்றனர். சீன அதிகாரிகள் தரப்பில், ‘ஜின்ஜியாங் மாகாணத்தில் மக்கள் தொகை அதிகரிப்பதால், வறுமையும், பழமைவாதமும் அதிகரிக்கிறது; இந்த அபாயகரமான போக்கை தடுக்கவே கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன’ என்கின்றனர்.

ALSO READ  கிறிஸ்துமஸை முன்னிட்டு “வியட்நாம்” செல்ல சிறப்பு சலுகைகள் வழங்கும் ஐ.ஆர்.சி.டி.சி

ஜின்ஜியாங் மாகாணத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் காரணமாக குழந்தை பிறப்பு வீதம் 24 சதவீதம் குறைந்துள்ளது இதேபோல் தேசிய அளவில் 4.2 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. குறிப்பாக உய்குர் பிராந்தியங்களில் 60 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.

சீனா தன்னை கம்யூனிச நாடாக காட்டிக் கொண்டாலும் சீனாவில் பெரும்பான்மை மக்கள் ஹன் (Han) இனத்தைச் சேர்ந்தவர்கள். ஹன் இனத்தைச் சேர்ந்த மக்களின் ஆதிக்கம் எல்லா மட்டத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் இந்தியாவில் மட்டுமே ஜாதிய பாகுபாடுகள் ஜாதி ஆதிக்கங்கள் இருப்பதாக கருதப்படுகிறது. ஆனால் உலக நாடுகள் அனைத்திலும் பெரும்பான்மையின மக்கள் சிறுபான்மையின மக்களை தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சீனா நவீன அறிவியல்பூர்வ இனப்படுகொலையை நிகழ்த்தி வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உலகில் 10.93 கோடியாக உயர்ந்த கொரோனா பாதிப்பு தொற்று !

News Editor

பேருந்து பயணிகள் மீது திடீர் தாக்குதல்:

naveen santhakumar

ஈரானில் குடிநீர் தட்டுப்பாடு….போராட்டத்தில் குதித்த மக்கள்….

Shobika