உலகம்

கொரோனா தடுப்பூசி இலவசம்-பிரான்ஸ் பிரதமர்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரான்ஸ்:

கொரோனா தடுப்பூசியை சில நாடுகள் மக்களுக்கு இலவசமாக வழங்குகிறோம் என்று அறிவித்துள்ளது.சமீபத்தில் ஜப்பான் நாட்டு அரசு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுவதற்கான மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது.

இந்நிலையில் பிரான்ஸில் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அந்நாட்டு பிரதமர் ஜீன் காஸ்டெஸ் கூறுகையில்,”பிரான்ஸ் மக்கள் அனைவருக்கும தடுப்பூசி இலவசமாக போடப்படும்.இதற்காக வருகிற நிதியாண்டில் 1.5 பில்லியன் யூரோ நிதி ஒதுக்கப்படும்.ஐரோப்பிய ஒழுங்குமுறை விற்பனை ஆணையத்தின் ஒப்புதலுக்காக இருப்பதால் இன்னும் சில வாரங்களில் கொரோனா தடுப்பூசி பிரச்சாரம் தொடங்கப்படும்.

ALSO READ  தேர்தல் வரலாற்றிலேயே அதிகம் செலவு செய்யப்பட்ட தேர்தல் இதுதான்:

பல்வேறு மருந்து நிறுவனங்களிடம் இருந்து 200 மில்லியன் டோஸ் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பாதுகாப்பாக இருக்கும் என்று மக்களுக்கு உறுதி அளிக்கிறேன்” என்று கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் இருந்து 90,000விலங்குகள் உயிருடன் மீட்பு

Admin

ஸ்புட்னிக்-வி தடுப்பு மருந்தை இந்தியாவுடன் இணைந்து அதிகளவில் தயாரிக்க ரஷ்யா தீவிரம் :

naveen santhakumar

ஜெர்மனியில் நிர்வாணமாக சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்… காரணம் என்ன..???

naveen santhakumar