உலகம்

சொகுசு படகில் கொரோனா சிகிச்சை …. மக்களை காக்க போராடும் நாடு…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களிடம் இருந்து மக்களை பாதுக்காக்க நெதர்லாந்து அரசு வித்தியாசமான முடிவை கையாண்டுள்ளது.

உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நெதர்லாந்து நாடும் தப்பவில்லை. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற ஒருபுறம் போராடினால், மற்றொரு புறம் பாதிக்கப்படாத மக்களை காக்கவும் போராட வேண்டிய நிலைமை உள்ளது.

இந்நிலையில் அந்நாட்டில் ஆர்ன்ஹெம் (Arnhem) நகரிலுள்ள உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் ருமேனியா நாட்டின் தொழிலாளர்கள் 28 பேருக்கு சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது,

ALSO READ  பள்ளிகள் திறக்கப்பட்டதால் பெரும்பாலான குழந்தைகளுக்கு கொரோனா பரவல்:

இதனைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் அருகில் உள்ள நதியில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசுப்படகிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதுகுறித்து அர்ன்ஹெம் நகர மேயர் அஹ்மத் மார்கவுச் (Ahmed Morcouch) கூறும்போது:-

இது ஒரு பாதுகாப்பான தீர்வு. நகர மக்கள் நன்மை கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டது. தொழிலாளர்கள் நன்கு குணம் அடையும் வரை இந்த படகில்தான் இருப்பார்கள் என்றார்.

ALSO READ  பாகிஸ்தானில் 15 வயது சிறுமியை கடத்தி தொடர்ந்து 24 மணிநேரம் கூட்டு பாலியல் வன்கொடுமை..

இதற்கிடையே இந்த 28 தொழிலாளர்களும் தங்கியிருந்த 3 வீடுகளில் மேலும் 21 பேர் இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அந்த தொழிற்சாலை அமைந்துள்ள நகர மக்களின் பாதுகாப்பு கருதி இத்தகைய முடிவு எடுக்கப்பட்டதாக மேயர் மார்க்வுச் தெரிவித்துள்ளார். சொகுசு படகில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்ட சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெதர்லாந்தில் இதுவரை 40,000 மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் 5000 மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமெரிக்க தேர்தல்….முதல்கட்ட வாக்குப்பதிவு முடிவுகள்…..

naveen santhakumar

மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தந்தை காலமானார்

naveen santhakumar

இந்தியா நோக்கி புறப்பட்டன ப்ரான்ஸின் ரஃபேல் போர் விமானங்கள்; புதன்கிழமை அம்பாலா வந்தடையும்… 

naveen santhakumar