உலகம்

அமெரிக்க தேர்தல்….முதல்கட்ட வாக்குப்பதிவு முடிவுகள்…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன்:

உலகமே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த அமெரிக்கா அதிபர் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிக் கொண்டு இருக்கின்றது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்று வாக்களிப்பதற்கு கடைசிநாள். ஏற்கனவே மொத்தம் உள்ள 25 கோடி வாக்காளர்களில் 9 கோடிக்கும் அதிகமான மக்கள் ஏற்கனவே வாக்களித்து முடித்து விட்டார்கள். இன்று வாக்களிப்பதற்கான கடைசி நாளாக இருக்கிறது. இதன் காரணமாக மக்கள் இன்று நள்ளிரவு முதலே வாக்களிக்க தொடங்கிவிட்டார்கள். அமெரிக்காவில் உள்ள மிகச்சிறிய மாநிலங்களில் ஒன்றான நியூ ஹாம்ஷையரில் இருக்கக்கூடிய 2 பகுதிகளுக்கான வாக்குப்பதிவு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன.

ALSO READ  அமெரிக்க வெளியுறவு மந்திரி இந்தியா வருகிறார் :

அங்குள்ள ஒரு சிறிய பகுதிகளில் 5 வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.இந்த 5 வாக்குகளும் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஜோ பிடனுக்கு கிடைத்திருக்கிறது. மற்றொரு பகுதியில் மொத்தம் இருக்கக்கூடிய 21 வாக்குகளில், 16 வாக்குகள் டிரம்ப்புக்கும், பிடனுக்கு 5 வாக்குகளும் கிடைத்திருக்கின்றன. ஆனால் இது ஒரு முதல்கட்ட முடிவுகள்தான். 

மொத்தம் இருக்கக்கூடிய 25 கோடி வாக்காளர்களில் கிட்டத்தட்ட 50 முதல் 55 சதவீத வாக்காளர்கள் வாக்கு பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்க படுகிறது. இன்று மொத்தம் 5 முதல் 6 கோடி பேர் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி நாளை காலைக்கு பிறகே நாம் முழுமையான முடிவுகளை பார்க்க முடியும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிறந்து 30 மணிநேரமே ஆன குழந்தைக்கு கொரோனா பாதிப்பு.

naveen santhakumar

“ஒரு சின்ன குழு.. மொத்த உலகத்துக்கும் ரூல்ஸ் போட முடியாது”.. ஜி7 மாநாட்டை பகிரங்கமாக விமர்சித்த சீனா.. !

naveen santhakumar

மீண்டும் எபோலா வைரஸ் பரவல்- காங்கோவில் ஒருவர் பலி….

naveen santhakumar