உலகம்

அமெரிக்காவில் கலவரம்: ஜார்ஜ் பிளாயட் கொலையை வீடியோ எடுத்த 17 வயது சிறுமி…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன்:-

அமெரிக்க டிரெக் சாவின் (Derek Chauvin) என்ற போலீஸால் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்ட சம்பவத்தை 17 வயது சிறுமி மொபைல் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதவிவேற்றியது தற்போது தெரியவந்துள்ளது. 

அமெரிக்காவின் மினியாபொலிசில், கடந்த மே.25-ம் தேதி ஜார்ஜ் பிளாய்டு (46) என்ற நபரை ஒரு போலீஸ்காரர், சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து பிளாய்டை தரையில் சாய்த்து, அவருடைய கழுத்தில், தன் கால் முட்டியாமல் அந்த போலீஸ்காரர் நெருக்கியுள்ளார். இதில், மூச்சுவிட முடியாமல், பிளாய்டு, அதே இடத்தில் உயிரிழந்தார். இது சமூக வலைதளங்களில் வீடியோவாக வைரலாக பரவியது.

இந்நிலையில் ஜார்ஜ் பிளாயட் கழுத்தை முட்டி காலால் நெருக்கும் காட்சியை மொபைலில் வீடியோ எடுத்தவர் 17 வயது டார்னெல்லா ஃப்ரேஸர் (Darnella Frazier) என்ற சிறுமி என தெரியவந்துள்ளது. இவரது வீடியோ மூலம் தான் நிறவெறிக்கு எதிரான போராட்டம் அமெரிக்காவில் பெரும் கலவரமாக மாறி உள்ளது.

இது குறித்து சிறுமி டார்னெல்லா கூறியதவது:-

ALSO READ  ஈராக் எர்பில் விமானநிலையத்தின் மீது ஆயுதமேந்திய ட்ரோன் தாக்குதல்..!

கடந்த மே 25-ம் தேதி மின்னபொலிஸ் நகரில் கடைக்கு வந்த ஜார்ஜ் பிளாயட், 20 டாலர் கொடுத்து சிகரெட் கேட்டுள்ளார். அந்த டாலர் போலியானது என கண்டுபிடித்த கடைக்காரர் போலீசை வரவழைத்துள்ளார். காரில் வந்த நான்கு போலீசாரில் ஒருவர் தான் ஜார்ஜ் பிளாய்ட் கைகளை பின்னால் கட்டி குப்புற படுக்க வைத்து கழுத்தை தனது முட்டி காலால் நெருக்கினார்.

தனக்கு மூச்சு திணறல் ஏற்படுவதால் முட்டி காலை எடுக்குமாறு ஜார்ஜ் முனங்கினார். அதனை கேட்காமல் தொடர்ந்து நெருக்கியதால் ஜார்ஜ் பிளாயட் இறந்தார். 8 நிமிடம் 46 நொடி நடந்த அந்த கொடூர நிகழ்வை நான் சில அடி தூரத்தில் நின்று வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதவிவேற்றினேன் என்றார். இந்த வீடியோ காட்சி தான் அமெரிக்கா முழுதும் பரவி பெரும்பாலான நகரங்களில், இந்தப் போராட்டங்கள், வன்முறையாக மாறியுள்ளன.

ALSO READ  2022 க்குள் சீனாவின் தியான்ஹே விண்வெளி நிலையம் பயன்பாட்டுக்கு வர ஏற்பாடு

இதனிடையே டார்னெல்லாவை ஏராளமானோர் விமர்சனமும் செய்தனர். ‘நீ ஏன் அவரை காப்பாற்ற செல்லவில்லை’ என்று டார்னெல்லாவை பார்த்து கேள்வி கணைகளை தொடுத்தனர்.

தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலளித்த டார்னெல்லா:-

நான் ஒரு மைனர் பெண். அங்கே நடந்த சம்பங்களை பார்த்ததும் பயந்து விட்டேன் WTF. என்னால், அந்த போலீஸை எதிர்த்து போராடிவிட முடியுமென்று கருதுகிறீர்களா. ஜார்ஜ்  இறப்பதை நான் 5 அடி தொலைவிலிருந்து பார்த்தேன். அந்த தருணத்தை எப்படி உணர்வதென்றே எனக்கு தெரியவில்லை. மிக மோசமான சம்பவம் அது. என் நிலையில் இருந்து பார்த்தால்தான் அதை உணர முடியும்  என்று பதிலளித்துள்ளார். 

ஜார்ஜ் பிளாயிட் மரணத்தை கண்டித்து நடந்து வரும் போராட்டங்களிலும் டார்னெல்லா ஃப்ரேஸர் கலந்து கொண்டுள்ளார்.

இதனிடையே ஜார்ஜ் பிளாயட் இறப்பதற்கு காரணமாக இருந்த டிரெக் சாவின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர் மீதான குற்றம் நிரூபணமானால் அவருக்கு 35ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உள்ளாடைகளுடன் பணிபுரியும் நர்ஸ்.. புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சை… சர்ச்சை ஏற்படுத்திய புதிய வாய்ப்பு… 

naveen santhakumar

விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டார் அலெக்சி நவால்னி :

naveen santhakumar

கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான பரிசோதனை நிறுத்தம்:

naveen santhakumar