உலகம்

இத்தாலி மற்றும் சீனாவை தாண்டியது அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share


நியூயார்க்:-

உலக அளவில் சீனா மற்றும் இத்தாலியை தாண்டியது அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை.

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 16,877 பேர் காணாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் உலகளவில் அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 263 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை அமெரிக்காவில் மொத்தம் 85,088 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக சீனாவில் 81,285 பேரும் இத்தாலியில் 80,589 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரத்தில் அமெரிக்காவில் கொரோனாவால் 8000 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரே வாரத்தில் இந்த எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்துள்ளது.

ALSO READ  கொரோனாவை கண்டறியும் கருவியை கண்டறிந்தது போஷ் (Bosch) நிறுவனம்...

இதுவரை அமெரிக்காவில் மொத்தமாக 1,290 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் இதுவரையில் 8,215 பேர் உயிரிழந்துள்ளனர் கொரோனாவின் பூர்வீகமான சீனாவில் 3,287 உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்க வெள்ளை மாளிகையின் கொரோனா தடுப்பு பிரிவு சிறப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் டெபோரா பிரிக்ஸ் (Dr Deborah Brix) கூறுகையில்:-

கோரோனா பாதிப்புக்குள்ளான நோயாளிகளின் எண்ணிக்கையில் 55 சதவீதம் பேர் நியூயார்க் மற்றும் நியூஜெர்ஸியை சேர்ந்தவர்கள். நியூயார்க்கில் குறிப்பாக நியூயார்க் மெட்ரோ பகுதியை சேர்ந்தவர்களாக உள்ளனர். 

ALSO READ  அமெரிக்க வெளியுறவு மந்திரி இந்தியா வருகிறார் :

அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் இதுவரையில் 19 மாகாணங்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், இதுவரையில் அமெரிக்காவில் 5,50,000 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வு முடிவின்படி பிரிட்டனில் கொரோனாவால் 5,00,000 உயிரிழப்புக்கள் ஏற்படும் என்று தெரிவித்துள்ளது. இதேபோல் அமெரிக்காவில் 2.2 மில்லியன் அளவுக்கு உயிரிழப்புகள் ஏற்படும் என்று தெரிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சீனாவில் கொரோனோ வைரஸ் : பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்வு

Admin

பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி டெல்டா வைரஸ் நோயை தடுப்பதாக தகவல்

News Editor

46,000 ஆண்டுகால பூர்வக்குடிகளின் பாரம்பரிய பாறைக்குகைகளை வெடி வைத்துத் தகர்த்த கார்பரேட் நிறுவனம்: பூர்வகுடிகள் கொந்தளிப்பு…

naveen santhakumar