உலகம்

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி மருந்திற்கு மெக்சிகோ அனுமதி:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மெக்சிகோ :

உலக அளவில் கொரோனா வைரஸால் அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகளில் மெக்சிகோவும் ஒன்று.மெக்சிகோவில் இதுவரை 14 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 1 லட்சத்து 27 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனகா நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியானது வைரஸ் பரவலை தடுப்பது தெரியவந்துள்ளது.இதனால், இந்த தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர இங்கிலாந்து, இந்தியா, அர்ஜெண்டினா ஆகிய நாடுகள் அனுமதி வழங்கியுள்ளன.

ALSO READ  மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடத்த அதிரடி தடை:

இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி நேற்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.இந்தியாவில் இன்னும் சில நாட்களில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பயன்பாட்டிற்கு வர உள்ளது.இந்நிலையில், ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அனுமதி அளித்துள்ள நாடுகள் பட்டியலில் தற்போது மெக்சிகோவும் இணைந்துள்ளது.

ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு மெக்சிகோ அரசு நேற்று அனுமதி வழங்கியுள்ளது. அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் இங்கிலாந்தை தொடர்ந்து இன்னும் சில நாட்களில் மெக்சிகோவிலும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா வைரஸ் அறிகுறிகளை மறைத்தால் 6 மாதம் சிறை…..

naveen santhakumar

சொகுசு படகில் கொரோனா சிகிச்சை …. மக்களை காக்க போராடும் நாடு…

naveen santhakumar

பிடனின் அமைச்சரவையில் யாருக்கெல்லாம் வாய்ப்பு??????

naveen santhakumar