உலகம்

மனித எலும்புக்கூடுகளுடன் ஜப்பான் கடற்பகுதியில் கரை ஒதுங்கிய பேய் படகு..! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டோக்கியோ:-

ஆள் ஆதரவற்ற நூற்றுக்கணக்கான வடகொரிய படகுகள் எலும்புக்கூடுகளுடன் தங்கள் கடற்பகுதியில் கரை ஒதுங்கும் நிலையில் சீனா மீது பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது ஜப்பான். 

கடந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 600 ஆதரவற்ற படகுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, கடந்த ஆண்டில் மட்டும் 150 படகுகள் ஜப்பான் கடற்பகுதியில் கரை ஒதுங்கியுள்ளன. கடந்த 2019 டிசம்பரில் ஜப்பானின் சாடோ (Sado) தீவுக்கு அருகே மரத்தினாலான படகு ஒன்று கரை ஒதுங்கியது. 

அதில் துண்டிக்கப்பட்ட நிலையில் இருவரின் தலைகளும் எலும்புக்கூடாக உருமாறி வரும் ஐவரின் சடலங்களும் ஜப்பான் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 50 வடகொரியர்களின் சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளதாக ஜப்பானின் கடலோர பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.

வடகொரிய கடலில் சட்டவிரோதமாக மீன் பிடிக்க சீனா பெரும் ஆயுத பலத்துடன் கூடிய தொழில்துறை கப்பல்களை அனுப்பியுள்ளது. இதனால் வட கொரிய மீனவர்கள் பாதுகாப்பற்ற படகுகளில் அதிக தொலைவு கடலுக்குச் செல்வதன் மூலம் தங்கள் உயிரைப் பணயம் வைத்தனர். 

ஒரு பக்கம் சீனாவின் ஆதிக்கத்தை கண்டு கொள்ளாத கிம் அரசு, மறுபக்கம் உணவு தட்டுப்பாட்டை சமாளிக்க மீனவர்களை கடலுக்குச் செல்ல கட்டாயப்படுத்தியும் வருகிறது. இது பாரு உயிரை பணயம் வைத்தே கடலுக்கு செல்லும் வடகொரிய மீனவர்கள் பலர் கடலின் சீற்றம் தாங்க முடியாமல் கரை திரும்பாமல் போனதாகவும் கூறப்படுகிறது. இதனால் வட கொரியாவின் கடற்கரை கிராமங்களில் விதவை கிராமங்கள் (Widow Villages) என்றே அழைக்கப்படுகிறது.

ALSO READ  சீனாவின் ஜியோமி உட்பட 9 நிறுவனங்கள் கருப்பு பட்டியலில் சேர்ப்பு…...அமெரிக்கா அதிரடி…..

இதே வேளை, கடந்த 7 ஆண்டுகளில், கடல் அலைகளில் சிக்கி, படகு கவிழ்ந்து, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சுமார் 50 வடகொரிய மீனவர்களை ஜப்பானிய கடற்படை அதிகாரிகள் மீட்டனர். அப்போது ஜப்பானிய கடற்படை அதிகாரிகள் முன்வைத்த முக்கிய கேள்விகளுக்கு அவர்கள் பதிலளிக்க மறுத்துள்ளனர். 

சீனாவின் ஆதரவுடன் வடகொரிய கடற்பகுதிகளில் மீன் பிடிக்க களமிறங்கும் தொழில்முறை படகுகள் ஒருபோதும் கடலில் தங்கள் இருப்பிடத்தை பகிரங்கப்படுத்துவதில்லை என்று பிரபல கார்டியன் (Guardian) பத்திரிகை கூறியுள்ளது.

சர்வதேச மீன் பிடி கண்காணிப்பு அமைப்பு ஒரு அறிக்கையில், சீனாவை சேர்ந்த 900 க்கும் மேற்பட்ட கப்பல்கள் 2017 ஆம் ஆண்டில் சட்டவிரோதமாக மீன் பிடித்துள்ளன. இதேபோல் 2018 இல் 700 கப்பல்கள் மீன் பிடித்து உள்ளன. இவை அனைத்தும் சேர்ந்து மொத்தமாக 160,000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக மீன் பிடிபட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் 346 மில்லியன் டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ALSO READ  கொரோனா பரவல்; இந்தியாவுக்கு உதவ முன்வந்த சீனா !

வட கொரியா கடற்பகுதிகளில் வெளிநாட்டு படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கும் ஐ.நா. மன்றத்தின் பொருளாதாரத் தடைகளை சீனா மீறியுள்ளது என்று முக்கிய ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

சர்வதேச மீன்பிடி கண்காணிப்பு அமைப்பை சேர்ந்த (Global Fishing Watch) ஜெய்யுன் பார் (Jaeyoon Park) என்ற தரவுகள் ஆய்வாளர் (Data Scientist) கூறுகொயில்:-

மற்றொரு நாட்டின் கடல் பகுதியில் வேறொரு நாட்டின் தொழில்துறை கடற்படையால் நிகழ்த்தப்பட்ட சட்டவிரோத மிகப்பெரிய மீன்பிடித்தல் குற்றம் இதுவாகும்.  ஆனால் வடகொரியா இதுநாள் வரையில் இதற்கு எந்தவிதமான எதிர்வினையும் ஆற்றவில்லை என்றார்.

சீனக் கப்பல்கள் உள்ளூர் கடற்படைகளை இடம்பெயர்ந்து வருகின்றன, சுமார் 3,000 வட கொரிய படகுகள் 2018 ஆம் ஆண்டில் ரஷ்ய நீரில் சட்டவிரோதமாக மீன் பிடிக்க கட்டாயப்படுத்தியதாக அறிக்கை கூறுகிறது. சிலர் எரிபொருள் அல்லது  இயந்திர சிக்கல்கள், கடுமையான நீரோட்டங்கள் மற்றும் வலுவாக நிலவும் காற்றுகளால் ஜப்பானின் கடற்கரைக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Watch : சிறுவர் பூங்காக்களில் கார் ஒட்டி விளையாடும் தலிபான்கள்…!

naveen santhakumar

ஈரானில் அரசுக்கெதிரான போராட்டத்தில் பங்கேற்ற பிரிட்டன் தூதர் கைது

Admin

கொரோனா சிகிச்சை மையமாக மாறிய பயணிகள் கப்பல் :

Shobika