உலகம்

ஈரானின் செய்தி இணையதளங்களை அதிரடியாக முடக்கிய அமெரிக்கா :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன்:

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளான சீனா,பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகியவற்றுடனும், ஜெர்மனியுடனும் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் ஈரான் ஏற்படுத்தியது.ஆனால் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் என்று வர்ணிக்கப்பட்ட இந்த ஒப்பந்தம், அமெரிக்க நலன்களுக்கு எதிரானது என அந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்த டிரம்ப் குற்றம் சாட்டினார். அத்துடன் அந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாகவும் அவர் 2018 மே மாதம் 8-ம் தேதி அறிவித்தார்.

ஈரான் செய்தி இணையதளங்களை அதிரடியாக முடக்கியது அமெரிக்கா! - கனடாமிரர்

அதைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் பொருளாதார தடைகளை விதித்தது. இதனால் ஈரானுக்கு பொருளாதாரத்தில் பலத்த அடி விழுந்தது. இதில் இருந்து அவ்விரு நாளுகளுக்கும் இடையே தீராப்பகை மூண்டுள்ளது. அமெரிக்காவில் ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவி ஏற்றும் இந்தப் பகையில் மாற்றம் இல்லை.இந்நிலையில் ஈரான் நாட்டின் செய்தி இணையதளங்களை அமெரிக்கா அதிரடியாக முடக்கியுள்ளது.தவறான தகவல்களைப் பரப்புவதாக குற்றம் சாட்டி இந்த நடவடிக்கையை அமெரிக்கா எடுத்துள்ளது.இதனால் அந்த இணையதளங்களை அமெரிக்காவில் யாரும் பார்க்க முடியவில்லை. அமெரிக்காவால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அந்த இணைய தளங்களில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு எப்.பி.ஐ. மற்றும் வர்த்தக துறையின் முத்திரைகளும் பதிக்கப்பட்டுள்ளன.

ALSO READ  அமெரிக்காவில் நிறுவப்பட்ட 25 அடி உயர ஹனுமான் சிலை…

மேலும் ஈரான் அரசுக்கு சொந்தமான பிரஸ் டி.வி., மற்றும் ஏமனின் ஈரான் கூட்டாளியான ஹவுதி இயக்கத்தினரின் அல் மசிரா டி.வி.யும் தடை செய்யப்பட்டுள்ளன. ஈரான் அணுசக்தி தவிர்ப்பு ஒப்பந்தத்தை மீண்டும் தொடங்குவதுதொடர்பாக அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையேயான பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது சர்வதேச அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Iran News Websites Freeze - US Action || ஈரான் செய்தி இணையதளங்கள் முடக்கம்  - அமெரிக்கா அதிரடி

இது குறித்து விளக்கி அமெரிக்க அரசின் நீதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,’ஈரான் இஸ்லாமிய ரேடியோ மற்றும் டெலிவிஷன் யூனியன் நடத்துகிற 33 இணைய தளங்களும், ஈராக்கில் ஈரான் ஆதரவு பெற்ற கட்டைப் ஹிஸ்புல்லா இணையதளங்களும் அமெரிக்காவால் கைப்பற்றப்பட்டுள்ளன.ஈரான் இஸ்லாமிய ரேடியோ மற்றும் டெலிவிஷன் யூனியன் பயன்படுத்தும் களங்கள் ஒரு அமெரிக்க நிறுவனத்துக்கு சொந்தமானவை. இதற்காக அமெரிக்க கருவூலத்துறையின் வெளிநாட்டு சொத்து கட்டுப்பாட்டு அலுவலகத்தில் இருந்து ஈரான் இஸ்லாமிய ரேடியோ மற்றும் டெலிவிஷன் யூனியன் உரிமம் பெறவில்லை.

ALSO READ  பிறந்தநாளில் இறந்த கணவன்; மறுநாளை குழந்தை பெற்ற பெண்- அமெரிக்காவில் நெகிழ்ச்சி சம்பவம்...
US Seizes Control Of 2 Iranian State News Websites Al-Alam And Press TV

மேலும் கட்டைப் ஹிஸ்புல்லா அமைப்பு, அமெரிக்காவால் பயங்கரவாத இயக்கமாக கருதி தடை செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பும் உரிமம் பெறவில்லை. எனவே இந்த இணையதளங்கள் செவ்வாய்க்கிழமை (நேற்றுமுன்தினம்) மதியம் முதல் முடக்கப்பட்டுள்ளன’.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இது தொடர்பாக ஈரான் தரப்பில் இருந்து எந்த கருத்தும் உடனடியாக வெளியாகவில்லை.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இளம்பெண்ணை கடித்து குதறிய சிங்கம்.. தென்னாப்பிரிக்காவில் நடந்த பயங்கரம்..

naveen santhakumar

பள்ளிகள் திறக்கப்பட்டதால் பெரும்பாலான குழந்தைகளுக்கு கொரோனா பரவல்:

naveen santhakumar

இங்கிலாந்து பகுதியில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸின் புதிய வகை

naveen santhakumar