உலகம்

பிறந்தநாளில் இறந்த கணவன்; மறுநாளை குழந்தை பெற்ற பெண்- அமெரிக்காவில் நெகிழ்ச்சி சம்பவம்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெக்சாஸ்,

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் தலைநகரில் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பிரஷாந்த் கொம்மி ரெட்டி (38) தனது மனைவி திவ்யாவுடன் வசித்து வந்தார்.

பிரசாந்த் ரெட்டி அமெரிக்க ஏர்லைன்ஸில் பணிபுரிந்து வருகிறார் பிரசாந்த் திவ்யா தம்பதிகளுக்கு 3 வயதில் ஒரு மகள் உள்ளார். சம்பவத்தன்று மனைவி திவ்யாவிற்கு பிறந்த நாளாகும் அதோடு பிரசவம் நெருங்கும் நேரத்தில் இருந்தார்.

பிரசாந்த் ரெட்டி தனது அலுவலகத்தில் கூட்ட அறையில் இருந்தார். அப்பொழுது தனக்கு கழுத்து வலிப்பதாக கூறினார் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

ஆசையாய் கணவர் அலுவலகத்திலிருந்து வருவார் என்று எதிர்பார்த்திருந்த திவ்யாவிற்கு அதிர்ச்சியே மிஞ்சியது இந்நிலையில் திவ்யாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டது உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் மறுநாள் திவ்யாவிற்கு பெண் குழந்தை பிறந்தது.

ALSO READ  முதல்வர் பழனிசாமிக்கு அமெரிக்காவின் Paul Harris Fellow விருது…

பிரசாந்த் ரெட்டி அங்கு உள்ள அமெரிக்க வாழ் தெலுங்கு மக்கள் கூட்டமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்துள்ளார்.

இதனிடையே பிரசாந்த் ரெட்டி நண்பரான சந்தோஷ்குமார் தெலுங்கானா அமைச்சர் கே டி ராமாராவ்-க்கு ட்விட்டர் வழியாக கோரிக்கை ஒன்றை வைத்தார்.

அதில் எனது நண்பர் பிரசாந்த் ரெட்டி அமெரிக்காவில் அகால மரணமடைந்து விட்டார் அங்கு அவரது மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர் எனது நண்பரின் சகோதரர் பேகம்பேட்டையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் அமெரிக்கா செல்வதற்கான விசாவிற்காக காத்துக் கொண்டிருக்கிறார். எனவே இந்த விஷயத்தில் தலையிட்டு எனது நண்பரின் சகோதரர் உடனே அமெரிக்கா செல்ல தங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு கோரிக்கைவிடுத்தார்.

ALSO READ  மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளிக்கொண்டு நாட்டை விட்டு ஓடிய அதிபர் :

உடனடியாக அமைச்சர் கே டி ராமாராவ் அமெரிக்க தூதரகத்தை தொடர்பு கொண்டு உதவி செய்தார்.

பிரஷாந்தின் அகால மரணத்தால் தவிக்கும் பிரசாந்தின் குடும்பத்திற்காக பிரசாந்த் உடன் பணிபுரியும் சக ஊழியர்கள் ஆன்லைன் மூலம் அவரது குடும்பத்திற்கு நிதி திரட்ட ஆரம்பித்தனர். இதுவரையில் கிட்டத்தட்ட 2.7 கோடி ரூபாய் நிதி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆரஞ்சு பழ அளவில் சூரிய குடும்பத்தில் ஒன்பதாவது கிரகம்… 

naveen santhakumar

இந்த நாட்ல மட்டும் கொரோனோ இல்லையாம்..எந்த நாடு தெரியுமா?

naveen santhakumar

46-வது அதிபராக வெள்ளை மாளிகையில் தனது பணிகளை தொடங்கினார் ஜோ பைடன் :

naveen santhakumar