உலகம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க உள்ளார் அயர்லாந்து பிரதமர்…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டப்லின்:-

அயர்லாந்து பிரதமரான லியோ வராத்கர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு வாரத்திற்கு சிகிச்சை அளிக்க உள்ளார்.

லியோ வராத்கர் அரசியல்வாதியாக மாறுவதற்கு முன்பு மருத்துவராக பணியாற்றினார். பின்னர் முழுநேர அரசியலில் இறங்கியதால் கடந்த 2013ம் ஆண்டு மருத்துவத் தொழிலில் இருந்து விலகினார். இந்த நிலையில் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அயர்லாந்தையும் பாதித்தது.

அயர்லாந்தில் இதுவரை கொரோனாவால் 1200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

இதனால் அங்கு மருத்துவர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் தன்னை மருத்துவராக பணியாற்ற அனுமதிக்குமாறு சுகாதாரத்துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அனுமதி கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து, அடுத்து வரும் ஒரு வாரத்திற்கு லியோ மருத்துவராகப் பணியாற்றுவார் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ALSO READ  கொரோனா தொற்று உறுதி… வடிவேலு உடல் நிலை எப்படியிருக்கு?

இதுகுறித்து கூறிய பிரதமரின் செய்தித்தொடர்பாளர்:-

தந்தை கட்டான சூழ்நிலையில் தன்னால் ஆன சிறிய உதவியை நாட்டிற்கு செய்யவேண்டும் என்ற காரணத்தினால் இந்த முடிவை எடுத்துள்ளார் மேலும்

அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பலர் மருத்துவத் துறையில் பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.

ALSO READ  தான்சானியா நாட்டில் பழம் மட்டும் ஆடு ஆகியவற்றில் கொரோனா- அதிபர் தகவல்...

லியோ வராத்கரின் பெற்றோர் டாக்டர் மற்றும் நர்சு தம்பதிகளா அவர் மேலும் இவர்களின் 2 சகோதரிகளும் அவர்களது கணவர்களும் மருத்துவ  துறையில் பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிலிப்பைன்ஸில் போலி மதுவால் ஏற்பட்ட சோகம்

Admin

ஊரடங்கால் வெறும் தண்ணீரை அடுப்பில் வைத்து கற்களைப் போட்டு சமையல் செய்த அவலம்..

naveen santhakumar

‘உங்களைப் பாதுகாப்பதன் மூலம் உங்கள் வீட்டை பாதுகாக்கலாம்’- ஜாக்கி சான்….

naveen santhakumar