‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தின் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளதால், வடிவேலு மீதான ரெட் கார்டை நீக்கிவிட்டது தயாரிப்பாளர் சங்கம். இதனால் தொடர்ச்சியாகப் படங்களில் காமிட்டாகியுள்ளார். செகன்ட் இன்னிங்ஸை சிறப்பாக ஆரம்பிக்க திட்டமிட்ட வடிவேலு, லைகா தயாரிப்பில் இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக எடுக்கப்படும் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங் லண்டனில் நடைபெற்று வந்தது. படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து நேற்று வடிவேலு லண்டணில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்துள்ளார். ஒமைக்ரான் பரவல் காரணமாக விமான நிலையம் வரும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை விமான நிலையத்தில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. மேலும் முதற்கட்ட பரிசோதனையிலேயே எஸ்.ஜீன் மாற்றம் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, நடிகர் வடிவேலு போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வடிவேலுவின் உடல் சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.