உலகம்

கூகுள் டிரைவ் செயலி ஆபத்தானதா???

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலகின் முன்னனி இணையதள நிறுவனமான கூகுள்(google) ஸ்மார்ட்போன்(smartphone) வந்ததிலிருந்து நம்முடைய வாழ்வை எளிதாக்கி உள்ளது.

சில முக்கிய விஷயங்களை பதிவேற்ற கூகுள் டிரைவ்(google drive) என்ற சேவையையும் அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக நடத்தி வருகிறது. கூகுள் டிரைவ்(google drive) எனப்படும் ஆப்-ல் ஃபைல்களை ஸ்டோர் செய்யும் வசதி உள்ளது.

இந்த சேவையில் பயனாளிகள் தங்களது கோப்புகளை(files) ஆன்லைனில் சேமித்து வைத்துக் கொள்ளக் கூடியதாகவும் பிறருக்கு பகிர்ந்து கொள்ளக் கூடியதாகவும் உள்ளது.

ALSO READ  கொரோனா தடுப்பூசி இலவசம்-பிரான்ஸ் பிரதமர்

இந்த கூகிள் டிரைவ்(google drive) சேவையில் சில குறைபாடுகள் இருப்பதாக தற்போது கருத்துகள் எழுந்துள்ளன. அதற்குக் காரணம், ஹேக்கர்கள்(hackers) பயனாளர்களின் கூகுள் ட்ரைவ்(google drive) கணக்கில் நுழைந்து ஹேக்(hack) செய்ய வசதியாக இருக்கும் மால்வேர்களை(malware) நிறுவுவதற்கு வாய்ப்புள்ளதாக அபாயம் எழுந்துள்ளன.

மால்வேர்களை(malware) நிறுவினால் பயனாளர்களின் கணக்குகளை ஹேக்கர்கள்(hackers) தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். இதன் மூலம் பயனாளர்களின் தகவல்களையும் ஹேக்கர்கள் திருடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

ALSO READ  உருமாறிய கொரோனா வைரஸ் : மீண்டும் முழு ஊரடங்கு அமல் !

அதுமட்டுமில்லாமல் கோப்புகள்(files) பகிரப்படும் போது அவற்றுடன் சேர்ந்து மல்வேர்களும்(malwares) பரவக் கூடிய ஆபத்துக்கள் இருக்கலாம் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஆகவே இதை தடுக்க கூகிள்(google) நிறுவனம் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆக்சிஜன் இன்றி உயிர்வாழும் முதல் உயிரினம் கண்டுபிடிப்பு…..

naveen santhakumar

ஜி20 மாநாட்டை புறக்கணித்து கோல்ஃப் விளையாட சென்ற டிரம்ப்:

naveen santhakumar

மல்யுத்த வீரர் ஸ்டோன் கோல்டு இன் முகத்தோடு ரன்வீர் சிங்கின் முகத்தை மார்பிங் செய்த மல்யுத்த வீரர் ஜான் சீனா… 

naveen santhakumar