உலகம்

இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்ட இஸ்ரேல் பிரதமர் மகன்!… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

Warning:- Offensive Content

டெல்அவிவ்:-

இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் பதிவிட்ட ட்வீட்டிற்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவின் மூத்த மகன் யேர் நெத்தன்யாகு (29) (Yair Netanyahu) இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

யேர் நெத்தன்யாகு கடந்த ஜூலை 26ஆம் தேதியன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட்டை பதிவிட்டிருந்தார். அதில் இந்து தெய்வமான துர்காவின் படத்தில், பெஞ்சமின் நெத்தன்யாகுவின் வழக்கறிஞரான லியட் பென் ஆரியின் (Liat Ben Ari) முகத்தை பொருத்தி பதிவு செய்திருந்தார்.

வழக்கறிஞர் லியட் பென் ஆரி, பெஞ்சமின் நெத்தன்யாகுவுக்கு எதிரான ஊழல் வழக்குகளில் வாதாடியவர். அவரின் திறமையை பாராட்டும் வகையில், பல கைகளை கொண்ட துர்காவின் உடலில் வழக்கறிஞர் முகத்தை பொருத்தி ட்வீட் செய்திருந்தார் யேர் நெத்தன்யாகு. மேலும் துர்க்காதேவி அமர்ந்திருக்கும் புலியின் முகத்தில் அட்டார்னி ஜெனரல் எவிசாய் மன்டெல்பிட் (Avichai Mandelbit)ன் இவற்றைப் பொறுத்து உங்கள் இடம் என்னவென்பதை தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் ஒரு வெறுக்கத்தக்க (Despicable)நபர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ALSO READ  உலகில் உள்ள கடல்களின் நீர் வற்றி விட்டால் பூமி எப்படி இருக்கும் ? நாசாவின் விபரீத யோசனையில் விளைந்த அனிமேஷன்.

இந்த ட்வீட் இந்தியர்களை கடுப்பாக்கிவிட்டது. இதைத்தொடர்ந்து யேர் நெத்தன்யாகுவை இந்தியர்கள் பந்தாடத் தொடங்கினர். மிக கடுமையாக விமர்சனங்களை சந்தித்த யேர் நெத்தன்யாகு, தனது ட்வீட்டிற்காக இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

அவர் தனது ட்வீட்டில்:-

இஸ்ரேல் அரசியல் தலைவர்களை விமர்சிக்கும் கேலி பக்கத்தில் இருந்து மீம் ஒன்றை பகிர்ந்திருந்தேன். அதில் இந்துக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் இருந்தது எனக்கு தெரியவில்லை. எனது இந்திய நண்பர்கள் மூலம் இதை தெரிந்துகொண்ட பிறகு அந்த ட்வீட்டை நீக்கிவிட்டேன். இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ALSO READ  கொரோனா பரவல்: உலகின் பாதுகாப்பான நாடு எது..??

இந்தியர்கள் மிகக் கடுமையாக கொந்தளிக்க காரணம் துர்கா தேவியின் பல கரங்கள் நடு விரலை காட்டியபடி (Middle Finger) இந்த புகைப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக யேர் நெதன்யாகு மன்னிப்பு கேட்டதை பல இஸ்ரேலியர்கள் வரவேற்றுள்ளனர். ஆனால் அதே சமயம் பெருவாரியான இஸ்ரேலியர்கள் யேர் நெதன்யாகுவிற்கு கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். இதுபோன்ற சர்ச்சைகளில் யேர் சிக்குவது முதன்முறையல்ல. தனது செயல்பாடுகளால் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது இவரது வாடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா பரவலுக்கிடையே சர்வதேச கவனத்தை ஈர்த்த இலங்கை திருமணம்…

naveen santhakumar

மாஸ்க் அணிவதால் ஏற்பட்டுள்ள புது பிரச்சனை- நுரையீரல் 90% சுருங்கிய சீனர்…

naveen santhakumar

தேடப்படும் குற்றவாளியாக மாறிய பிச்சைக்காரன்…ஏன் தெரியுமா..

Admin