உலகம்

மாஸ்க் அணிவதால் ஏற்பட்டுள்ள புது பிரச்சனை- நுரையீரல் 90% சுருங்கிய சீனர்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வூஹான்:-

சீனாவை சேர்ந்த 26 வயது இளைஞர் முகக்கவசம் அணிந்த படி பல கி.மீ ஜாகிங் சென்று போது, அவரது நுரையீரல் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலைக்கு சென்ற சம்பவம் நடந்துள்ளது.

கொரோனா வைரஸை தடுக்க பல்வேறு நாடுகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முகக்கவசத்தை பல மணி நேரம் அணிந்திருப்பதும் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கிறார்கள்.

இந்த நிலையில் கொரோனாவின் பூர்வீகமான சீனாவின் வூஹான் நகரைச் சேர்ந்த 26 வயது இளைஞர் சாங் பிங் என்பவர் முகக்கவசம் அணிந்த படி கடந்த ஒரு வாரமாக 6 கி.மீ வரை ஜாகிங் சென்றுள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம், நெஞ்சு வலியும் ஏற்பட்டு மயங்கியுள்ளார்.

உடனடியாக வூஹான் மத்திய மருத்துவமனையில் (Wuhan Central Hospital) சேர்க்கப்பட்டு பரிசோதித்து பார்த்ததில் அவரது இடது நுரையீரலில் பெரிய துளை எற்பட்டிருந்தது, மேலும் நுரையுரல் 90% சுருங்கியிருந்தது. மேலும் அவரது இதயம் வலது புறம் தள்ளப்பட்டிருந்தது. 

ALSO READ  அசாமில் பரவி வரும் பன்றிக் காய்ச்சலால் 13,000 பன்றிகள் உயிரிழப்பு...

இவரது நுரையிரலில் ஏற்பட்ட இந்த பாதிப்பிற்கு நியூமோடோராக்ஸ் (Pneumothorax) என்று பெயர். அறுவை சிகிச்சை மூலம் அது சரி செய்யப்பட்டு தற்போது சாங் பிங் உயிர் பிழைத்துள்ளார்.

இதற்கான காரணம் குறித்து விவரித்த மருத்துவர் சென் பவ்ஜுன் (Chen Baojun):-

ALSO READ  ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு… பிரதமர் மோடியின் ஏழு முக்கிய வேண்டுகோள்கள்….

முகக்கவசம் அணிந்தபடி தினமும் 6 கி.மீ ஜாகிங் சென்றதால் நுரையீரலுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்காமல் கடும் அழுத்தம் ஏற்பட்டு இறுதியில் நுரையீரல் செயல்பாட்டையே பாதித்துவிட்டது. கடுமையான உடற்பயிற்சியின் போது முகக்கவசத்தை தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளனர்.

இதனிடையே சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள Dancheng Caiyun Middle School பள்ளியில் உடற்பயிற்சி பாதிப்பின் போது முககவசம் அணிந்து கொண்டு உடற் பயிற்சி மேற்கொண்ட இரண்டு 14 வயது மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நவாஸ் ஷெரீப் மருமகன் கைது:

naveen santhakumar

அகதிகள் சென்ற படகு விபத்து….57 பேர் பலி

Shobika

ஒலிம்பிக்கில் இருந்து சீனாவை நீக்க வேண்டும்:

naveen santhakumar