உலகம்

கொரோனா பரவல்: உலகின் பாதுகாப்பான நாடு எது..??

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை உலக அளவில் 2 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

இத்தகைய சூழ்நிலையில் கோரோனா வைரஸ் பரவலை மிகச் சிறப்பாக கையாண்டு, கட்டுப்படுத்தி பொதுமக்களை பாதுகாக்கும் நாடுகளே தற்போது பாதுகாப்பான நாடுகளாக கருதப்படுகிறது.

அவ்வகையில் ஹாங்காங்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் ஒன்று அண்மையில் கொரபனூ பாதுகாப்பான நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. நோய் கண்காணித்தல் மற்றும் கண்டறிதல், நோய் தடுப்பு முறைகள், நோயுற்றவர்களை தனிமைப்படுத்துதல், அவசர சிகிச்சை தயாரில்லை, அரசாங்கத்தின் செயல்திறன் மற்றும் மேலாண்மை திறன், தனிமைப்படுத்தப்பட்ட செயல் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

ALSO READ  இனிமேல் பேஸ்புக் இல்ல : 'மெட்டா'ன்னு பேரு மாத்திட்டாங்க

அதன்படி தற்பொழுது உலகின் மிகவும் பாதுகாப்பான நாடாக இஸ்ரேல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது இஸ்ரேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்தை கடந்துள்ளது. நோயிலிருந்து குணமடைந்த நினைக்கும் 3000-ஐ தாண்டியுள்ளது. இந்நோயினால் இதுவரை 158 பேர் இஸ்ரேலில் மரணமடைந்துள்ளனர்.

ஆனாலும் இஸ்ரேல் நாட்டு நிர்வாகம் மிகவும் சிறப்பாக செயல்பட்டு உள்ளதாக இந்த அமைப்பு கூறியுள்ளது. இஸ்ரேல் அரசாங்கம் தற்போதைய இக்கட்டான காலகட்டத்தில் அதன் நிர்வாக செயல்திறனுக்காக மிக அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளது. மொத்தமாக இஸ்ரேல் நாடு 632.32 மதிப்பெண்களுடன் முதலிடத்தை பெற்றுள்ளது.

ALSO READ  'தேவர்மகன்' பட பாடலுக்கு குடும்பத்துடன் நடனமாடிய டேவிட் வார்னர்...

இவர்களுக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய நாடான ஜெர்மனி உள்ளது. ஜெர்மனி அவசர சிகிச்சை தயார்நிலை, நோய் கண்டறிதல் மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றில் இஸ்ரேலை விட அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளது.

ஜெர்மனியில் இதுவரை 1,40,000 மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் 4,300க்கும் மேற்பட்டோர் இந்நோயினால் உயிரிழந்துள்ளனர். அதேவேளையில் நோயிலிருந்து குணமடைந்து அவர்கள் எண்ணிக்கை 76,000-ஐ தாண்டியுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் தென்கொரியா உள்ளது. நான்காவது இடத்தில் ஆஸ்திரேலியா, ஐந்தாவது இடத்தில் சீனா, ஆறாவது இடத்தில் நியூஸிலாந்து, ஏழாவது இடத்தில் தைவான், எட்டாவது சிங்கப்பூர், ஒன்பதாவது ஜப்பான், பத்தாவது இடத்தில் ஹாங்காங் உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சீனா எல்லையை மூட வலியுறுத்தி ஹாங்காங் மருத்துவர்கள் ‘ஸ்டிரைக்’

Admin

தேடப்படும் குற்றவாளியாக மாறிய பிச்சைக்காரன்…ஏன் தெரியுமா..

Admin

போயிங் விமானம் முட்டாள்களால் வடிவமைக்கப்பட்டதா?

Admin