உலகம்

வாங்கிய அனைத்து லாட்டரிகளுக்கும் பரிசு மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போன நபர்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

விர்ஜினியா:-

அமெரிக்காவில் லாட்டரி டிக்கெட் வாங்கிய நபர் ஒருவருக்கு அவர் வாங்கிய அத்தனை லாட்டரிகளுக்கும் பரிசு விழுந்த சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள விர்ஜினியாவைச் சேர்ந்தவர் ரேமண்ட் ஹேரிங்டன். இவர் விர்ஜினியா பீச்சில் உள்ள வேக்நம் (Wegnam) ஸ்டோருக்குச் சென்றுள்ளார். அங்கு விர்ஜினியா லாட்டரியின் ஜூலை 17ஆம் தேதிக்கான ‘Pick 4’ குலுக்கலுக்கு லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். அதுவும் ஒரு டாலர் மதிப்புள்ள 25 லாட்டரி சீட்களை அந்த ஒரே குலுக்கலுக்கு வாங்கியுள்ளார். ஏனெனில் ஏதாவது ஒரு லாட்டரியில் பணம் விழாதா என்ற ஆசையில் தான் இப்படிச் செய்துள்ளார்.

ALSO READ  முதல்வர் பழனிசாமிக்கு அமெரிக்காவின் Paul Harris Fellow விருது…

இதற்கான முடிவுகள் வெளியான போது ரேமண்ட் ஹேரிங்டனால் ஆச்சரியம் தாங்க முடியவில்லை. ஆம், அவர் வாங்கிய 25 லாட்டரி சீட்களுக்கு பணம் விழுந்துள்ளது. ஒரு சீட்டிற்கு 5,000 அமெரிக்க டாலர் என்று மொத்தம் 1,25,000 டாலர்கள் கிடைத்துள்ளன.

இந்த பணத்தை தனது மகனின் கல்லூரி படிப்பிற்காக செலவிடப் போவதாக ஹேரிங்டன் கூறியுள்ளார். 

இதேபோல் கொலராடோ அருகே பியூப்லோ (Pueblo) நகரைச் சேர்ந்த ஜோ பி (Joe B) என்ற நபர் கடந்த 30 ஆண்டுகளாக லாட்டரி டிக்கெட் வாங்கி வருகிறார். ஆனால் ஒருமுறை கூட பணம் விழவில்லை. இந்நிலையில் அதிர்ஷ்டம் இவர் வீட்டை சமீபத்தில் தட்டியுள்ளது. அதுவும் இரண்டு முறை. சமீபத்தில் லேக் அவென்யூவின் 7-லெவனில் இருந்து காலையில் ஒரு கொலராடோ லாட்டரியும், லோஃப் அண்ட் ஜக்கில் இருந்து மாலையில் மற்றொரு கொலராடோ லாட்டரியும் வாங்கியுள்ளார்.

ALSO READ  முகமது நபியின் புகைப்படத்தை மாணவர்களிடம் காட்டியதால் ஆசிரியரின் தலை துண்டிக்கப்பட்டது:

இந்த இரண்டு லாட்டரியிலும் பணம் விழுந்துள்ளது. அதுவும் ஒரு லாட்டரி டிக்கெட்டிற்கு ஒரு மில்லியன் டாலர். மொத்தமாக இரண்டு மில்லியன் டாலர். இதுபோன்ற ஆச்சரிய சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஈரானில் 14 வயது சிறுமி ஆணவக் கொலை- மக்கள் கொந்தளிப்பு…

naveen santhakumar

தலிபான் ஆதரவு கணக்குகள் முடக்கம்- பேஸ்புக் எச்சரிக்கை …!

naveen santhakumar

இலங்கை அரசு அதிரடி…கொரோனா தடுப்பூசி சான்றிதழுடன் பொது இடங்களுக்கு செல்ல வேண்டும்…..

Shobika