உலகம்

நாய்க்கு டாக்டர் பட்டம் – அமெரிக்க பல்கலைக்கழகம் அதிரடி.. 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இனிமேல் யாரும் யாருக்கும் கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்கவே யோசிக்க வேண்டும் போல ஆம் ஏனெனில் அமெரிக்காவில் உள்ள நாய் ஒன்றிற்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

Call me Dr.Moose.

அமெரிக்காவில் உள்ள விர்ஜினியா டெக்ஸ் குக் கவுன்சிலிங் மையத்திலுள்ள (Virginia Tech’s Cook Counseling Centre) 8 வயதான லாப்ரடார் வகை நாய்க்கு கௌரவ டாக்டர் பட்டத்தைக் பெற்றிருக்கிறது. 

வெர்ஜினியா மேரிலேண்ட் காலேஜ் ஆப் வெட்னரி மெடிசின் இந்த நாய்க்கு கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது. இது யாரையும் அவமதிக்கும் நோக்கமெல்லாம் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.

ALSO READ  "மானத்த விட லேப் பெருசு"; பன்றியிடம் இருந்து தனது லேப்டாப்பை மீட்க, நிர்வாணமாக ஓடிய தாத்தா..! 
Virginia-Maryland College of Veterinary Medicine.

மூஸ் டேவிஸ் என அழைக்கப்படும் இந்த நாய், நிஜமாகவே இந்த மனோதத்துவ துறையில் சிகிச்சை விலங்காக பணியாற்றுகிறது. 2014 முதல் கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கும் மேலாக வெர்ஜீனியா டெக் குக் கவுன்சிலிங் மையத்தில் பணியாற்றி வருகிறது. பலரின் தற்கொலை எண்ணங்களை மாற்றுவதற்கும் மன அழுத்தத்தை போக்குவதற்கும் இது போன்ற நாய்கள் உதவுவதாக இவர்கள் கூறுகிறார்கள். 

இதுவரை இந்த நாய் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கும் 7 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கும் உதவியுள்ளது. வெர்ஜினியா டெக் குக் கவுன்சிலிங் மைய ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ட்ரெண்ட் டேவிஸ் (Dr Trend Davis) என்பவர் இந்த நாயை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

ALSO READ  பிடனின் தேர்தல் வாக்குறுதி…….

பலரின் மன வியாதிகளை குணமாக்கிய இந்த நாய் தற்போது கேன்சர் நோயால் அவதிப்பட்டு வருகிறது. 
எனவேதான் இறப்புக்குள் வழங்கப்படும் பெரும் கவுரவமாக டாக்டர் பட்டம் இந்த நாய்க்கு வழங்கப்பட்டிருக்கிறது. இது தகுதிக்கு கிடைத்த பட்டம்தான்!


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தாலிபான்களுக்கு எதிராக போர் முழக்கம்- மிரட்டும் 5 சிங்கங்களின் பூமி

naveen santhakumar

ஓமிக்ரான் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை ரஷ்யா உருவாக்கியுள்ளது

News Editor

விண்வெளி சுற்றுலா; ஸ்பேஸ் எக்ஸ் கவுண்டவுன் ஸ்டார்ட்..!!

News Editor