உலகம்

லாக்டவுன் நீக்கம்- நியூசிலாந்தில் மீண்டும் கொரோனா…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வெல்லிங்டன்:-

சமீபத்தில் தங்கள் நாட்டிலிருந்து கொரோனா வைரஸ் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் அறிவித்திருந்தார். தொடர்ந்து அந்த நாட்டில் 24 நாள்களாக கொரோனா தொற்று இல்லை. இதனால், ஊரடங்கு நீக்கப்பட்டு மக்கள் சகஜ வாழ்க்கைக்குத் திரும்பினர்.

சமீபத்தில் தொடர்ந்து 24 நாட்களாக கரோனா தொட்டு  புதிதாக பதிவாகாத எடுத்து நியூசிலாந்து நாட்டில் சமூக மற்றும் பொருளாதார ரீதியான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு ஊரடங்கு நீக்கப்பட்டது அதேவேளையில் நாட்டின் எல்லைகள் மூடப்பட்டு கட்டுப்பாடுகள் தொடர்ந்தது.

ALSO READ  கொரோனா இருக்கா..? இல்லையா..? முகத்தை பார்த்து சொல்லும் ஸ்மார்ட் செல்போன்!!

இந்நிலையில், இன்று (16/06/20) நியூசிலாந்து நாட்டில் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த இருவரும் பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டு தாயகம் திரும்பியவர்கள். நியூசிலாந்தின் சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா தொற்றுக்குள்ளான இருவரையும் சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

நியூசிலாந்து நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் 22 பேர் பலியாகியுள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பூமிக்கு அருகில் வரும் சனிக்கோள்..

News Editor

லாட்டரியில் கிடைத்த 700 கோடி… ஜெர்மானியருக்கு நேர்ந்த சிக்கல்

Admin

150 இந்தியர்களை தாலிபான்கள் விடுவிப்பு

News Editor