உலகம்

இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெறும் பெண் கவிஞர்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஸ்டாக்ஹோம்:

இந்த ஆண்டு, இலக்கியத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த பெண் கவிஞர் லூயி க்ளூக் கிற்கு வழங்கப்படுகிறது.

உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசானது மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய ஆறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு, ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

ALSO READ  வீடுகளுக்கே சென்று நோபல் பரிசு வழங்கப்பட்டது :

அமைதிக்கான நோபல் பரிசு, ஐரோப்பிய நாடான நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு, ஐரோப்பிய நாடான ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படுவது வழக்கம். கடந்த மாதம் அக்டோபர்-5ம் தேதி மருத்துவத்துறைக்கும், நேற்று முன்தினம், இயற்பியல் துறைக்கும், நேற்று வேதியியல் துறைக்குமென்று நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், இந்த ஆண்டிற்கென இலக்கியத்திற்கான நோபல் பரிசு, அமெரிக்காவை சேர்ந்த பெண் கவிஞர் லூயிஸ் குளூக் கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1943ம் ஆண்டு நியூயார்க்கில் பிறந்த அவர், கேம்ப்ரிட்ஜ் நகரில் வசித்து வருகிறார். கவிஞரான இவர், யேல் பல்கலையில் ஆங்கில துறை பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா வைரஸ் தாக்கிய இடத்தில் நடைபெற்ற நெகிழ்ச்சி சம்பவம்

Admin

மனைவியின் பிறப்புறுப்பை பசை போட்டு ஒட்டிய கணவன்!!

Admin

ஜி 7 அமைப்பில் இந்தியாவும் உறுப்பினராக சேர்க்கப்பட வேண்டும்; ஜி 7 மாநாட்டை ஒத்திவைக்கிறேன்- ட்ரம்ப்…

naveen santhakumar