உலகம்

உலக அறிவுசார் சொத்துரிமை தினம்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இன்று உலக அறிவுசார் சொத்துரிமை தினம் ஆகும். இந்த வருடத்திற்கான அறிவுசார் சொத்துரிமை தினத்திற்கான மையக்கருத்து (Theme) ‘Innovate for a Green Future’ என்பதாகும்.

பின்னணி:-

உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு 1970ஆம் ஆண்டு ஏப்ரல் 26 இல் உருவாக்கப்பட்டது. 

மக்களின் அன்றாட வாழ்வில் அறிவுசார் சொத்துரிமையின் பங்கு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகளாவிய ரீதியில் கண்டுபிடிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் ஓவியர்கள் சமூகத்துக்கு அளிக்கும் பங்களிப்புகளை கௌரவிக்கவும் இத்தினம் 2001ஆம் ஆண்டுமுதல் உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பால் (World Intellectual Property Organization (WIPO)) கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்றைய நவீன, தொழில்நுட்ப யுகத்தில் ஒருவரின் கலை, அறிவியல் படைப்புகள் திருடப்படுவதும், பாதிக்கப்பட்டவர், நீதிமன்ற வாசலில் ஏறி, இறங்குவதும் வாடிக்கையாகிவிட்டது. அதனால், கலைஞர்கள், கண்டுபிடிப்பாளர்கள், வணிகர்கள் தங்களின், அறிவுசார் சொத்துகளை பாதுகாத்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. 

ஒருவரின் அறிவின் வெளிப்பாடான கருத்துகள், வணிக முறைகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், கலை படைப்புகள் உள்ளிட்டவற்றை, அறிவுசார் சொத்துகளாக வகைப்படுத்திஉள்ளனர்.

பாதுகாக்கும் வழிமுறைகள்:-

அறிவுசார் சொத்துகளை, காப்புரிமை, வணிக உரிமை குறி, பயனீட்டு உரிமை, தொழில்சார் வடிவமைப்புகள், நிலஇயல் அடையாளக்குறி, வணிக மறைபொருள், தொகுப்பு சுற்று புரிவு வடிவமைப்பு ஆகிய, பிரிவுகளின் கீழ் பாதுகாத்து கொள்ளலாம்.

காப்புரிமை என்றால் என்ன ?

காப்புரிமை என்பது அறிவுசார் சொத்துரிமை என்ற பிரிவின் கீழ் வருகிறது. தொழில்நுட்ப பிரச்னைகளுக்குத் தீர்வாக அமையும் எந்த ஒரு கண்டுபிடிப்புக்கும் காப்புரிமை பெற முடியும். ஒரு கண்டுபிடிப்பு முயற்சியில் இறங்கும் முன்பே அது ஏற்கெனவே வேறு எவராலும் கண்டுபிடிக்கப்பட்டு காப்புரிமை பெறப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்தியக் காப்புரிமை இணையதளமான www.ipindia.nic.in தளத்தில் ஏற்கெனவே காப்புரிமை பெறப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ளலாம். உலகம் முழுவதும் உள்ள காப்புரிமை இணையதளங்களிலும் இதைத் தெரிந்துகொள்ளலாம்.

காப்புரிமைச் சட்டம் 1957:-

காப்புரிமைச் சட்டம் 1957-ன் நிர்வாகம் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறைக்கு மார்ச் 2016-ல் மாற்றம் செய்யப்பட்ட பிறகு, காப்புரிமைச் சட்டம் 1957, உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் காப்புரிமை உடன்படிக்கை மற்றும் உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் செயல்பாடு மற்றும் ஃபோனோகிராம் உடன்படிக்கைகளுடன் போட்டிப்போடும் அளவுக்கு உள்ளதா என்பதை ஆராய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  அத்துடன், உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்புடன் இணைந்தும், கூட்டு ஆய்வு ஒன்றும் மேற்கொள்ளப்பட்டது.

காப்புரிமைச் சட்டம் 1957, உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் காப்புரிமை உடன்படிக்கை மற்றும் உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் செயல்பாடு மற்றும் ஃபோனோகிராம் உடன்படிக்கைகளுக்கு ஏற்ப, 2012ஆம் ஆண்டு திருத்தப்பட்டது. “ பொது மக்களை தொடர்பு கொள்ளுதல் ”  என்ற சொல்லுக்கு, டிஜிட்டல் சூழல் (பிரிவு 2 (எஃப்.எஃப்.))-க்கேற்ப திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது- தொழில்நுட்ப பாதுகாப்பு நடவடிக்கை (பிரிவு 65ஏ)& உரிமை மேலாண்மை தகவல்(பிரிவு 65பி); செயல்பாட்டாளர்களின் தார்மீக உரிமை (பிரிவு 38பி); செயல்பாட்டாளர்களின் தனி உரிமை(பிரிவு 38ஏ); மின்னணு ஊடகங்கள் வாயிலாக பாதுகாப்பு அளித்தல் (பிரிவு 52(1) (பி) மற்றும் (சி)) ஆகியவை தொடர்பான திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டது.

ALSO READ  நெருக்கடியான இடங்களில் ஈசியாக பார்க் செய்ய டொயோட்டாவின் புதிய டெக்னாலஜி…

காப்புரிமை பெறுவது எப்படி?

ஒரு கண்டுபிடிப்புக்கான காப்புரிமையைப் பெறுவதற்கு முதலில் அந்தக் கண்டுபிடிப்பு பற்றி முழுமையாக எழுதி காப்புரிமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அந்தக் கண்டுபிடிப்பு, விண்ணப்பித்த நபருடையதுதானா என்பதைத் தெரிந்துகொள்ள, காப்புரிமை அலுவலகத்தின் அதிகாரிகள் கண்டுபிடிப்பு மேற்கொண்ட நபரிடம் டெக்னிக்கல் கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் ஆகியவற்றை விசாரித்துத் தெரிந்துகொள்வார்கள். பின்னர் எழுத்துபூர்வமாக சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களைச் சரிபார்த்து அதற்குக் காப்புரிமை வழங்கலாமா, வேண்டாமா என்ற முடிவுக்கு வருவார்கள். இந்தச் செயல்முறைகளெல்லாம் முடிந்த பின்பு, சுமார் ஒன்றரை வருடங்கள் கழித்து காப்புரிமை இணையதளத்தில் அந்தக் கண்டுபிடிப்புகள் பற்றிய முழு விவரங்களும் பதிவேற்றப்படும். அதற்கு எந்த ஒரு எதிர்ப்பும் எழாத பட்சத்தில் காப்புரிமை வழங்கப்படும். காப்புரிமை வழங்கப்பட்ட 2 ஆண்டுகளுக்குள் எவரேனும் உரிய ஆதாரங்களோடு எதிர்ப்பு தெரிவித்தால் காப்புரிமை ரத்து செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காப்புரிமை எவ்வளவு காலம் செல்லுபடியாகும் ?

20 ஆண்டுகளுக்கு மட்டுமே இந்தக் காப்புரிமை செல்லுபடியாகும். அதன் பின்னர் காப்புரிமையைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். காப்புரிமை பெற்ற பின்பு தங்கள் கண்டுபிடிப்பையும் காப்புரிமையையும் வேறு யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம் அல்லது அடமானமாகக்கூட வைக்கலாம்.

சரி, பதிப்புரிமை என்றால் என்ன? 

பதிப்புரிமை என்பது, இலக்கியங்கள், இசை, நாடகம், கலைப்படைப்புகள் ஆகியவற்ரின் படைப்பாளர்களுக்கும், திரைப்படம், இசைப்பதிவுகள் போன்றவற்றின் உரிமையாளர்களுக்கும் வழங்கப்படும் சட்ட உரிமை ஆகும். தங்களின் படைப்புகளை மறு உருவாக்கம் செய்தல், பொதுத்தொடர்புக்கு அளித்தல், தழுவி எழுதுதல், மொழி பெயர்த்தல் போன்ற வை தொடர்பாக படைப்பாளிகளுக்கு சில பாதுகாப்பு அம்சங்களை இந்த உரிமை வழங்குகிறது. கலைப்படைப்புகளுக்கு பாதுகாப்பும், வெகுமதியும் தருவதுதான் இதன் நோக்கமாக உள்ளது. 

இந்திய பதிப்புரிமையை எந்தச் சட்டம் நிர்வகிக்கிறது? 

1957  ஆண்டில் உருவாக்கப்பட்டு பின்னர் 1993, 1984, 1992, 1994 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் திருத்தப்பட்ட பதிப்புரிமை சட்டம்தான் இந்தியாவில் பதிப்புரிமைகளை நிர்வகிக்கிறது. 

இந்தியாவின் பதிப்புரிமைச் சட்டம், 1886 ஆம் ஆண்டின் பெர்ன் மாநாட்டு ஒப்பந்தம், 1951 ஆம் ஆண்டின் உலகளாவிய பதிப்புரிமைச் சட்டம், 1995 ஆம் ஆண்டின் அறிவுசார் சொத்துரிமையின் வணிகம் தொடர்பான அம்சங்கள் பற்றிய உடன்பாடு (TRIPS) உள்ளிட்ட பல்வேறு உலக ஒப்பந்தளுடன் ஒத்துப்போகும் வகையில் அமைந்திருக்கிறது. 

இந்தச் சட்டங்கள் WIPO காப்புரிமை உடன்பாடு (WCT), WITO செயல்பாடுகள் மற்றும் ஃபோனோகிராம் உடன்பாடு WIPPT என்று அழைக்கப்படுகின்றன. இணையதளங்கள் பெருகிவிட்ட நிலையில் பதிப்புரிமையை கைவசம் வைத்திருப்போர், ஃபோனோகிராம் கலைஞர்கள் மற்றும் உரிமையாளர்களின் நலனை பாதுகாப்பதற்காகவே, தொடர்புடைய அனைவருடனும் பேசி இந்தச் சட்டங்கள் உருவாக்கப்பட்டன. 

ALSO READ  நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவி 7 ஆண்டுகளுக்கு பின் விடுவிப்பு.....

1957 ஆம் ஆண்டு பதிப்புரிமை சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பின் எல்லைகள் என்ன? 

1957 ஆம் ஆண்டின் பதிப்புரிமைச் சட்டத்தின்படி, இலக்கியம், இசை, நாடகம், கலைப்படைப்புகள், திரைப்படங்கள், இசைப்பதிவுகள் போன்றவற்றின் மூலம் படைப்புகள் அனுமதி பெறாமல் பயன்படுத்தப்படுவது தடுக்கப்படுகிறது. மூலப்படைப்புகளும், கணினி பயன்பாட்டுக்கான சூத்திரங்களும் இந்த சட்டத்தின்படி பாதுகாக்கப்படுகின்றன. 

பதிப்புரிமை என்பது கருத்துக்களை வெளியிடும் முறைக்கு மட்டும்தானே தவிர, கருத்துக்களுக்கு அல்ல. 

சமுதாயத்தின் நலன்கருதி சில படைப்புகளுக்கு பதிப்புரிமையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சிசிகள், தனியார் ஆய்வுகள், நீதிமன்ற நடைமுறைகள், விமர்சனங்கள், செய்தி அறிக்கைகள், இலவசமாக நடத்தப்படும் தொழில் முறையற்ற நிகழ்ச்சிகள், இலக்கிய ஒலிப்பதிவுகள், நாடகம் மற்றும் இசைப்படைப்புகள் போன்றவை சில நிபந்தனைகளின் அடிப்படையில் பதிப்புரிமையில் இருந்து விலக்களிக்கப்பட்ட சிலவாகும்.

பதிப்புரிமைச் சட்டத்தால் யாருடைய உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன? 

மூலப்படைப்பின் ஆசிரியருடைய உரிமை இச்சட்டப்படி பாதுகாக்கப்படுகின்றது. கலைப்படைப்புகளின் ஆசிரியர், இசைப்படைப்புகளின் இசையமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், ஒலிப்பதிவுகளின் தயாரிப்பாளர், புகைப்படக்காரர்கள், கணினி மூலம் தயாரிக்கப்படும் படைப்புகளின் தயாரிப்பாளர், பாடலாசிரியர், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், இசைக்கருவி வாசிப்பவர்கள், ஒலிப்பதிவு நிறுவனங்கள் ஆகியவற்றின் உரிமைகலும் இச்சட்டப்படி பாதுகாக்கப்படுகின்றன. நிகழ்ச்சிகளை நடத்துவோர், ஒலிபரப்புவோர் ஆகியோரின் உரிமைகளையும் இச்சட்டம் பாதுகாக்கிறது. 

பதிப்புரிமை எத்தனை ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்? 

பதிப்புரிமை பொதுவாக 60 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். இலக்கியம், நாடகம், இசை மற்றும் கலைப்படைப்புகள் ஆகியவற்றுக்கான பதிப்புரிமை அவற்றின் ஆசிரியர் இறந்த பிறகும் 60 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும். 

திரைப்படங்கள், ஒலிப்பதிவுகள், புகைப்படங்கள், ஆசிரியரின் மறைவுக்கு பிறகு புதுபிக்கப்படும் படைப்புகள், அனாமதேய படைப்புகள், அரசின் படைப்புகள், சர்வதேச அமைப்புகளின் படைப்புகள் போன்றவற்றுக்கு அந்த படைப்புகள் போன்றவற்றுக்கு அந்த படைப்புகள் வெளியான நாளில் இருந்து 60 ஆண்டுகளுக்கு படைப்புரிமை இருக்கும். 

காப்புரிமைச் சட்ட மீறலுக்கான தண்டனை என்ன? 

எவரேனும் தெரிந்தே பதிப்புரிமையை மீறினாலோ அல்லது அதற்கு துணை போனாலோ, அது பதிப்புரிமை சட்டத்தின் 63வது பிரிவின்படி குற்றமாகும். இதற்காக குறைந்தபட்சம் 6 மாத சிறை தண்டனையும் ரூ.50 ஆயிரம் அபதாரமும் விதிக்கப்படும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட முறை இதே தவறை செய்தால் குறைந்தது ஓராண்டு சிறையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். 

எங்கு தெரிந்துகொள்ள வேண்டும்?

கண்டுபிடிப்பாளர்கள், தங்களின் படைப்புகளை, பதிவு செய்துகொள்ள விரும்பினால், 044 – 2250 2080 என்ற தொலைபேசி எண்ணிலோ, காப்புரிமை அலுவலகம், சென்னை நுண்ணறிவு செல்வ கட்டடம், ஜி.எஸ்.டி., வீதி, கிண்டி, சென்னை – 32, என்ற முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம். 

அறிவுசார் சொத்துரிமை பற்றி கல்வியை பெற விரும்பினால், சென்னை, அண்ணா பல்கலையின், அறிவுசார் சொத்துரிமைகள் மையத்தை அணுகலாம். அங்கு, மூன்று மாத சான்றிதழ் படிப்பு கற்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் தகவல்களுக்கு, 044-2220 9938, 6577 6767 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பாராலிம்பிக் டேபிள் டென்னிசில் இந்தியாவின் பவினா வெள்ளி பதக்கம் வென்றார்

News Editor

உலகின் டாப் 5 புத்தாண்டு கொண்டாட்டம்

Admin

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Shanthi