உலகம்

107 பேருடன் சென்ற விமானம் கராச்சியில் குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியது…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கராச்சி:-

பாகிஸ்தானில் லூகூரிலிருந்து புறப்பட்டுச் சென்ற விமானம் கராச்சி அருகே குடியிருப்புப் பகுதிக்குள் விழுந்து நொறுங்கியது. 

இந்த விமானம் 98 பயணிகள், 9 ஊழியர்கள் என மொத்தம் 107 பேருடன் பயணித்ததாக பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல் காக்கர் தெரிவித்துள்ளார். 

லாகூர் நகரிலிருந்து 107 பேருடன் பாகிஸ்தான் அரசின் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA) நிறுவனத்தின் A320 என்ற விமானம் கராச்சி நகருக்குப் புறப்பட்டது

விமாம் கராச்சியின் ஜின்னா சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே வந்தபோது, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.45 மணிக்கு தரையிறங்க ஒரு நிமிடம் இருந்தபோது, மலிர் பகுதியுள்ள மாடல் காலனி குடியுருப்புப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதாகக் கூறப்படுகிறது. விமானம் விழுந்து நொறுங்கியதில் 7 முதல் 8 வீடுகள் வரை சேதமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ALSO READ  பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் :

விமானத்தில் பயணித்தவர்கள் கதி என்ன என்று தெரியவில்லை. அந்த குடியிருப்பில் இருந்தவர்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்த தகவல் ஏதும் இல்லை. விபத்து நடந்த இடத்தில் மீட்புபுப் படையினர், தீயணைப்புப் படையினர், போலீஸார் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ALSO READ  உருமாறிய கொரோனா; ஜெர்மனியில் மீண்டும் பொது முடக்கம் அமல் !

பாகிஸ்தானில் இதற்கு முன்பு நடந்த விபத்துக்கள்:-

பாகிஸ்தான் வரலாற்றில் பயணிகள் விமானங்கள் மற்றும் ராணுவ விமானங்கள் என இதுவரை பல விமான விபத்துக்கள் நடைபெற்றுள்ளன.

சர்வதேச விமான விபத்துக்களை கண்காணிக்கும் விமான விபத்து பதிவு அலுவலக தகவல்படி, பாகிஸ்தானில் இதுவரை 80க்கும் மேற்பட்ட விமான விபத்துக்கள் நடந்துள்ளன என்றும், அதில் 1000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பேஸ்புக்கை தொடர்ந்து தலீபான்கள், அவரது ஆதரவாளர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்- பேஸ்புக் அதிரடி

naveen santhakumar

விண்வெளியில் ஒரு புதிய சகாப்தம்.. ஏவப்பட்டது ஆர்டெமிஸ்-1!

Shanthi

டோக்கியோ ஒலிம்பிக் 2020 நிறைவடைந்தது – பதக்க பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்தது – இந்தியாவுக்கு 33 வது இடம்

News Editor