உலகம்

முதன்முறையாக 90 வயது மூதாட்டிக்கு செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லண்டன்:

அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோ என்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி 95% சதவிகிதம் செயல் திறன் கொண்டது என தெரியவந்துள்ளது. இந்த தடுப்பூசி கொரோனா வைரஸ் தடுப்பில் முக்கிய பங்காற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசியின் செயல்திறன் அறிவிக்கப்பட்டதும் தடுப்பூசியை இங்கிலாந்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பைசர் நிறுவனம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தது.அந்த விண்ணப்பத்தை தொடர்ந்து  இங்கிலாந்தில் பைசர் தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அந்நாட்டு அரசு அனுமதியளித்தது.

ALSO READ  மக்கள் தவிப்பு…...உலகம் முழுவதும் ஜி-மெயில்,கூகுள் டிரைவ்,யூடியூப்...போன்ற தளங்கள் பாதிப்பு….:

இங்கிலாந்தில் பயன்பாட்டிற்கு வரும் கொரோனா தடுப்பூசி முதலில் யாருக்கு போட்டப்படுகிறது???? என்ற கேள்வியும், ஆர்வமும் உலகம் முழுவதும் எழுந்தது. அந்த கேள்விக்கான விடை தற்போது கிடைத்துள்ளது.பரிசோதனைகள் தவிர்த்து மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ள கொரோனா தடுப்பூசி உலகிலேயே முதல்நபராக 90 வயது மூதாட்டியான ‘மார்க்ரெட் கெனென்’ என்பவருக்கு போடப்பட்டுள்ளது.

இதன் மூலம், அதிகாரப்பூர்வாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட உலகின் முதல் நபர் என்ற பெருமையை மார்க்ரெட் கெனென் பெற்றுள்ளார்.தற்போது முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 21 நாட்களுக்கு பின்னர் செலுத்தப்பட உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடுரோட்டில் குளித்துக்கொண்டே பைக் ஓட்டிய வாலிபர்கள்

Admin

5-வது முறையாக அப்பாவானார் அஃப்ரிடி.!!

naveen santhakumar

உலகிலேயே மிக இளம் வயது பிரதமர் இவர் தான் – சாதனைப் படைந்த பின்லாந்து பெண்

Admin