உலகம்

ஆப்கானிஸ்தான் விவகாரம்: பிரதமர் மோடி பிரான்சு அதிபருடன் ஆலோசனை..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்திய பிரதமர் மோடி இன்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார். 

பிரதமர் மோடி, இன்று பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது இருவரும் ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலை, போதைப்பொருள், பயங்கரவாதம், பெண்கள் உரிமை, சிறுபான்மையினர் பிரச்சினை ஆகியவை குறித்து விவாதித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இருநாட்டின் ஒத்துழைப்பு குறித்து ஆய்வு செய்தனர். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இருநாட்டின் ஆலோசனைகள் அப்படியே நீட்டிக்க இருவரும் ஒப்புக்கொண்டனர்.

ALSO READ  அண்டார்டிக்காவிலும் நுழைந்த கொரோனா வைரஸ்...!

அதே நேரத்தில், பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகம், “கோவேக்ஸ் திட்டத்தின் கீழ் மீண்டும் தடுப்பூசியை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவெடுத்திருப்பதை ஜனாதிபதி வரவேற்றார். வரவிருக்கும் காலநிலை மாற்றம் தொடர்பான G20 மற்றும் COP26 நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதற்காக அவர்கள் வழக்கமான கலந்துரையாடல்களை நடத்துவார்கள், மேலும் இருநாடுகளும் தொற்றுநோய்க்கு எதிரான கூட்டு நடவடிக்கையைத் தொடரும் ” என தெரிவித்துள்ளது. சா.கற்பகவிக்னேஷ்வரன்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ராணி எலிசபெத்தின் கிறிஸ்துமஸ் ட்ரீட்!

Admin

ஸ்பைடர்மேன் இளைஞர் செய்யும் ஆச்சரியமூட்டும் செயல்

Admin

பாகிஸ்தான் பங்குச் சந்தை கட்டடத்தில் துப்பாக்கிச் சூடு 9 பேர் உயிரிழப்பு…

naveen santhakumar