உலகம்

ஆசியாவின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை IIT முதல் 50-வது இடத்தை பெற்றுள்ளது :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

Q.S.நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் மற்றும் ஆசியாவின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.அவ்வகையில் 2020-ம் ஆண்டிற்கான ஆசியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது.

இந்த பட்டியலில் முதல் 50 இடங்களில் மும்பை IIT, டெல்லி IIT மற்றும் சென்னை IIT ஆகிய உயர்கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. 37வது இடத்தை மும்பை IIT-ம்,  47வது இடத்தை டெல்லி IIT-ம், 50வது இடத்தை சென்னை IIT-ம் பெற்றுள்ளன. இந்த மூன்று நிறுவனங்களும் இரண்டாவது ஆண்டாக டாப்-50 இடத்தை தக்க வைத்துள்ளது.  

ALSO READ  உலகில் தலை சிறந்த விஞ்ஞானிகளில் 100 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் : ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் ஆய்வில் தகவல்

கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் முதலிடத்தை பிடித்துள்ளது.இது தொடர்பான செய்தியை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். “நமது பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் கல்வித்துறை சிறப்பாக செயல்படுவதற்கு இது ஒரு சான்றாகும்” என்றும் அவர் கூறியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிணங்களுடன் வீட்டிற்குள் இருந்த 52 வயது முதியவர்

Admin

1.5 கோடி மதிப்பிலான முகக் கவசங்கள் திருட்டு….

naveen santhakumar

அமெரிக்காவில் கடும் பனியால் கார்கள் மோதி விபத்து

Admin