உலகம்

கொரோனாவின் அனைத்து வெர்ஷன்களையும் ஓடஓட விரட்டும் ‘சூப்பர் வேக்சின்’ :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன் :

கொரோனா வைரஸ் டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் என உருமாறி அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில், விஞ்ஞானிகள் எல்லா வகை கொரோனா வைரஸ்களில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கும் புதிய ‘சூப்பர் வேக்சின்’ ஒன்றை கண்டறிந்து உள்ளனர்.

In Telangana, potential 'super spreaders' to soon get COVID-19 vaccine  shots- The New Indian Express

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், சூப்பர் வேக்சின் என்று குறிப்பிடப்படும் ஹைபிரிட் தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளனர்.கொரோனா வைரசின் ஆபத்தான அமைப்பான ஸ்பைக் புரதத்தின் பல்வேறு வகைகளுக்கு எதிராக, ஆன்ட்டிபாடிகளை இந்த தடுப்பு மருந்து உருவாக்குவது, எலிகள் மீதான பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய்த்தொற்று ஏற்படாமல் தடுப்பதோடு, நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதையும் தடுப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  கொரோனாவுடன் வாழ்வதற்கு பழகிவிட்ட அமைச்சர்…...யார் அந்த அமைச்சர்?????
Scientists developed super vaccine to prevent infections from future  coronavirus variants corona cases surge in maharashtra - कोरोना: अगले साल  'सुपर वैक्सीन' आने की संभावना, महाराष्ट्र में फिर से ...

கொரோனா நோய்த்தொற்றை உருவாக்கும் கொரோனா வைரஸ்கள் மட்டுமின்றி, விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய வாய்ப்பு உள்ள பிற கொரோனா வைரஸ்களுக்கு எதிராகவும் தடுப்பாற்றலை ஏற்படுத்தும் வகையில், தடுப்பு மருந்து வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தடுப்பு மருந்து அடுத்த ஆண்டில் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா வைரஸால் சீனாவில் உருவாகியுள்ள புது பிரச்சனை….

naveen santhakumar

கொரோனா ஊரடங்கு உத்தரவு நேரத்தில் புதிதாக உருவாகியிருக்கும் பில்லோ சேலஞ்ச்….

naveen santhakumar

குறையாத கொரோனா திணறும் ஆஸ்திரேலியா !

News Editor