உலகம்

ஹைதி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்….உயரும் பலி எண்ணிக்கை…..!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஹைதி:

கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவானது. ஹைதியின் போர்ட்-அயு- பிரின்ஸில் இருந்து 118 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Haiti earthquake today don damage buildings and many dey feared dead - BBC  News Pidgin

மேலும், அமெரிக்காவின் அலாஸ்காவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவானதாகவும், இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.இதற்கிடையே, ஹைதி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 29 பேர் பலியாகி உள்ளதாகவும், பலர் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ALSO READ  அமெரிக்காவில் அதிக கொரோனா மரணங்களுக்கு காரணம் வெண்டிலேட்டர்கள் தான்- மருத்துவர்கள் பகீர்...
Haiti earthquake today: 7.2 magnitude quake hits off coast; at least 304  people killed - ABC7 San Francisco

இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என கூறப்படுகிறது.இந்நிலையில், ஹைதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டை புரட்டிப் போட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 227 ஆக உயர்ந்துள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நான் வரமாட்டேன்…. அடம்பிடித்த சர்க்கஸ் யானை

Admin

பதிவியேற்பு விழாவிற்கு டிரம்புக்கு அழைப்பு விடுக்கும் ஜோ பிடன் :

naveen santhakumar

ராக்கெட் வேகத்தில் காரை இயக்கி சாதனை படைக்கும் முயற்சி தோல்வி

Admin