உலகம்

சுலைமானியின் இறுதிச் சடங்கால் அமெரிக்கா பீதி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அமெரிக்காவின் டிரோன் படை தாக்குதல் மூலம் கொலை செய்யப்பட்ட ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானியின் இறுதிச்சடங்கு மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த இறுதிச்சடங்கில் பல லட்சம் பேர் கலந்து கொண்டனர். இதனால் ஈரான் அமெரிக்கா இடையே போர் உருவாவதற்கான சூழ்நிலைகள் உருவாகி வருகிறது. இந்த போர் எப்போது வேண்டுமானாலும் மூன்றாம் உலகப் போராக மாறும் என்றும் கூறுகிறார்கள்.

ALSO READ  ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கியது ஆஸ்திரேலிய அரசு :

இதையடுத்து நேற்று சுலைமானி உடல் ஈராக்கில் இருந்து ஈரான் கொண்டு வரப்பட்டது. ஈரானில் தலைநகர் டெஹ்ரானில் அவரின் உடலுக்கு இறுதிச்சடங்கு நடந்தது. வடகிழக்கு நாட்டின் தலைவர்கள், ஈரான், ஈராக்கை சேர்ந்த முக்கிய தலைவர் இந்த இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர்.

15 லட்சத்திற்கும் அதிகமான பேர் இந்த இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள். உலகிலேயே யாருடைய இறுதிச்சடங்கிற்கும் இவ்வளவு கூட்டம் கூடியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  இலங்கையில் 5000க்கும் மேற்பட்ட இரட்டையர்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடி கின்னஸ் சாதனை

மொத்தம் 30 கிமீ தூரத்திற்கு இந்த கூட்டம் நீண்டு இருந்தது. இந்த கூட்டம் எவ்வளவு தூரம் இருந்தது என்று வீடியோ வெளியாகி உள்ளது. இவ்வளவு மக்கள் அந்நாட்டு அரசுக்கு ஆதரவு தருவது, அமெரிக்காவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூன்றாவது உலக தலைவர்

News Editor

தலீபான்களுக்கு ஆதரவான கணக்குகளை முடக்குவதாக பேஸ்புக் நிறுவனம் அறிவிப்பு :

Shobika

இந்தோனேசிய நாட்டில் கடுமையான நிலநடுக்கம்….

Shobika