உலகம்

பெண்களை துண்டு துண்டாக வெட்டிக்கொலை செய்த ‘ட்விட்டர் கில்லர்’ 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜப்பானில்  ஷிரைஷி   எனும் நபர் தற்கொலை செய்து கொள்ள விரும்புவதாக சமூக வலைதளத்தில்  பதிவிடும் பெண்களை ட்விட்டர் மூலம் தொடர்பு கொண்டு தான் அதற்கு உதவி செய்வதாக கூறி இருக்கிறார்.  இதனை நம்பி வரும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் கொலை செய்த  ஷிரைஷி   அவர்களின் உடல்களை துண்டு துண்டாக வெட்டி தன் வீட்டில் சேமித்து வைத்துள்ளார். பின்னர் ஒன்பது பேரை இப்படி கொலை செய்து செய்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியது. 

ALSO READ  ஜியோவை பின்னுக்கு தள்ளியது ஏர்டெல் நிறுவனம்..!

காணாமல் போன ஒரு பெண்ணுக்கும்  ஷிரைஷிக்கும்   நடந்த ட்விட்டர் உரையாடல்களை அந்தப் பெண்ணின் சகோதரர் கண்டு பிடித்த போது  இந்த அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியில் வந்தன. இதனை அடுத்து கடந்த 2017ஆம் ஆண்டு  ஷிரைஷி  கைது செய்யப்பட்டார். 


ஜப்பானில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தின் குற்றவாளியான  ஷிரைஷிக்கு  டோக்கியோ நீதிமன்றம்  தூக்கு தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது தற்கொலை  எண்ணம் கொண்டவர்களை தான்  கொலை செய்ததாக கூறிய ஷிரைஷி தரப்பு வாதத்தை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதனை தொடர்ந்து நீதிமன்றத்தின் தீர்ப்பை ஜப்பான் மக்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு வழங்கப்படுகிறது:

naveen santhakumar

புலியை பிடிக்கச் சென்ற போலீசாருக்கு காத்திருந்த ஆச்சரியம்….

naveen santhakumar

அமெரிக்க வெளியுறவு மந்திரி இந்தியா வருகிறார் :

Shobika