உலகம்

புலியை பிடிக்கச் சென்ற போலீசாருக்கு காத்திருந்த ஆச்சரியம்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இங்கிலாந்தில் உள்ள ஒரு  கிராமத்தில் புலி ஒன்று சுற்றித் திரிவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக புலியை பிடிக்க காவல்துறையினர் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் ஹெலிகாப்டர் மூலம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு சென்ற காவல்துறைக்கு ஆச்சரியம் ஒன்று காத்திருந்தது.  

இங்கிலாந்தில் கென்ட் (Kent) அருகே செவன்ஓக்ஸ் (Sevenoaks) பகுதியிலுள்ள இக்தம் (Ightham) கிராமத்தில் புலி ஒன்று சுற்றித் திரிவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது இதையடுத்து பத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஆயுதங்களுடன் புலியை பிடிக்க கிளம்பினார்கள்.

புலியை கண்ட காவல்துறையினர் அதனை பிடிக்க அருகில் சென்ற போது அது கோழி வலை மற்றும் பிசினிலிருந்து தயாரிக்கப்பட்ட புலி சிற்பம் என்று தெரியவந்தது. மேலும் அந்த புலி சிற்பம் 20 ஆண்டுகளாக  கிராமத்தின் அடையாளமாக இருந்து வந்துள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

ALSO READ  ஸ்டோன் ஹென்ஜ் பிரம்மாண்ட கற்தூண்களின் மர்மம் நீங்கியது… 

இந்த சிற்பத்தை 85 வயதான ஜூலியட் சிம்ஸன் (Juliet Simpson) என்ற மூதாட்டி வடிவமைத்துள்ளார்.  தகவல் தெரிந்ததும் உடனடியாக பிரிந்து சென்ற மூதாட்டி போலீசாரிடம் இது குறித்து விளக்கியுள்ளார்.

Juliet Simpson

புலியை பிடிக்க போரோம் என்று  ஆயுதங்களுடன் ஹெலிகாப்டரில் சென்ற போலீசாருக்கு இந்த சம்பவம் கடைசியில் நகைச்சுவையாக முடிந்துள்ளது.

ALSO READ  உருமாறிய கொரோனா தொற்றால், ஊரடங்கை நீட்டித்து இங்கிலாந்து..!


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரேசிலை மிரட்டும் கொரோனா; ஒரே நாளில் 3 ஆயிரத்தை கடந்த உயிர்பலி !

News Editor

விமானத்தின் மீது நாணயங்களை வீசிய சீனப்பயணி

Admin

இம்ரான் கான் தலைமையில் “பொம்மை ஆட்சி நடக்கிறது”……. நவாஸ் ஷெரிப் குற்றச்சாட்டு……

naveen santhakumar